February 19 2018 0Comment

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்:

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்:

தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்.

தேவஸ்தான கோயில்:
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

பிற சன்னதிகள்:
முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் உள்ளன.

கோயில் உருவாக்கம் :
சிறு கோயிலுள் குடிகொண்டிருந்த முத்துமாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது. தற்போது இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது. சூலை 2014இல் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இக்கோயிலுக்கு வருகை தந்து முத்துமாரியம்மனையும், துர்கையையும் வழிபட்டுச் சென்றார்.

Share this:

Write a Reply or Comment

eight − 4 =