January 17 2018 0Comment

பல ஆண்டுகளாக கடலுக்கு நடுவில் உள்ள நவகிரக கோவில்:

நவபாஷாண நவக்கிரக கோவில்

⭐ புராண காலம் தொட்டே கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்களும் அமைந்த அற்புத காட்சி அமைந்துள்ள அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோவில் ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் உள்ளது.

⭐ ராமன் இலங்கையை அடைய பாலம் கட்டுவதற்கு முன் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய நவபாஷாணமிட்ட தலமே தேவிபட்டினம் ஆயிற்று. மேலும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை.

தெய்வங்கள் : நவகிரகங்கள்

பிரதிஷ்டை : ஸ்ரீராமர்பிரான்

சிறப்பு : கடல்நடுவே

தீர்த்தம் : அக்னி தீர்த்தம், ராமர் தீர்த்தம்

புராணபெயர் : தேவிப்பூர்

தல வரலாறு :

⭐ தான் பெற்ற வரத்தைக் கொண்டு மகிஷாசுரன் என்னும் அசுரன் தேவலோகத்தில் உள்ள தேவர்களை துன்புறுத்தினான். அவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல், இறுதியாக பராசக்தி தேவியிடம் முறையிடுகின்றனர். உடனே பராசக்தி தேவியும் அரக்கனுடன் யுத்தம் செய்ய வருகிறாள். இது கண்டு அரக்கன் பயந்து ஓடி வந்து தேவிபட்டினத்திலுள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்கிறான்.

⭐ சக்கர தீர்த்தத்தினை பராசக்தி தன்சக்தியால் வற்றச் செய்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து அவனுக்கு சாப விமோசனம் தருகிறாள். இது கண்டு உளமகிழ்ந்து தேவர்கள் அமிர்தத்தைப் பொழிய, தர்மதேவதையும் அருள் வழங்கினாள். அன்று முதல் தேவிபுரம் தேவிபட்டினமாக வழங்கி வருகிறது.

ராம அவதாரம் :

⭐ ராவணன் படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்து தேவ அசுரர்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தினை பெறுகிறான். ஆனால் ராவணன் தனக்கு மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை, இதுவே ராம அவதாரம் தோன்றக் காரணமாக அமைந்தது.

⭐ ராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான். இதை அறிந்த ராமன் சீதையை மீட்பதற்காக தென்திசைநோக்கி வந்தார். சாஸ்திரங்களிலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி ராமபிரானும் உப்புபடிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரை பூஜை செய்தார். அதுவே தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகர்.

தலபெருமை :

⭐ அமைதியான ஆரவாரமில்லாத கடலின் நடுவே நவபாஷாணமாக அமைந்து நவக்கிரகங்கள் அருள் பாலித்து வருவது இத்தல சிறப்பாகும். மூர்த்தி, தலம், கீர்த்தி என்று எல்லாமே ஒன்றிணைந்த நிலையை அளிக்கும் தலம் தான் நவபாஷாணம் ஆகும்.

⭐ ஸ்ரீராமபிரான் தமது கையால் ஒன்பது பிடி மணலால் நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்துள்ள சிறப்பு வாய்ந்த தலம். ஸ்ரீராமபிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம். பார்வதி பரமேஸ்வரனும் ஸ்ரீராமபிரானுக்கு ஆசிகள் வழங்கி இத்தலத்திலே சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வரராக எழுந்தருளியுள்ளார்.

⭐ இங்கு ராமரால் கடலுக்குள்ளே நவபாஷாண நவக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது மிகச் சிறப்பானது.

Share this:

Write a Reply or Comment

two + 11 =