நைனாதீவு நாக பூசணியம்மன்: –

ஸ்ரீ

Nainativu Temple

சென்னையிலிருந்து கொழும்புவிற்கு ஒருமணி நேர விமானப் பயணம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எட்டுமணி நேர இரயில் பயணம்

யாழ்பாணத்திலிருந்து நைனா தீவின் ஒரு பக்க கரைக்கு ஒரு  மணி நேர கார் பயணம்

Nainativu Boat

நைனா தீவின் ஒரு பக்க கரையிலிருந்து நைனா தீவின் மறுபக்க கரைக்கு இருபது  நிமிட படகு பயணம்

ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின் நைனா தீவு நாக பூசணியம்மனின் தரிசனம்

சந்தோஷத்தின் முதல் பக்கம்

அற்புதத்தின் மறு பக்கம்

ஆனந்தத்தின் உச்ச கட்டம்

என என் ஈழ உறவுகளின் உயிர் ஆதாரமாக விளங்கும் நைனா தீவு நாக பூசணியம்மனை என்னவென்று சொல்வது……………….!!!!!!!!!

இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை… பிச்சை எடுத்தாவது போய் பார்க்க வேண்டிய இடம் நைனா தீவு நாகபூசணியம்மன் கோவில்………………….

யாழ்பாணம் மலாயன் கபே – வில் அற்புதமான தமிழர்களின் உணவு உண்மையான உணர்வுடன் கிடைக்கும். எனவே உணவிற்கும் பஞ்சம் இல்லை.

malaayan cafe

இராகு, கேது பிரச்சினை, சாபம், தோஷம் என விபரம் புரியாமல் நம் ஊர் ஜோதிட சிகாமணிகள் மக்களை திருநாகேஸ்வரத்திற்கும், காளஹஸ்திக்கும் பந்தாடுவதை நைனா தீவு போய் வந்த பிறகு யோசித்து பார்த்தால் சிரிப்பு தான் வருகின்றது.

உங்கள் அறியாமை அகல, திருமண தடை உடைந்து நிறைவேற, நல்ல குழந்தை தங்கு தடையின்றி பிறக்க, சிறந்த வேலை வசப்பட, தேவைப்படும் அளவிற்கு பணம் கிடைக்க, நீங்கள் நல்வாழ்க்கை வாழ என் ஆராய்ச்சியை பொறுத்தவரை பெரிய அளவில் உதவும் ஒரே கோவிலாக நான் நைனா தீவு நாக பூசணியம்மனை பார்க்கின்றேன்.

செல்லுங்கள் நைனாதீவிற்கு

சென்று வந்த பின் சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அதிசய திருப்புமுனைகளை அடுத்தவர்களுக்கு.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

five × 3 =