VPT – III: –

ஸ்ரீ

quaking-aspen-1

ரால்ப் வால்டோ எமர்சனின் கீழ்கண்ட வைர வரிகள் தான் நடுக்கடலில் நான் தனியே தத்தளித்த போது என்னைக் கரை சேர்ந்த பாய்மர படகு என இன்றும் மனதார நம்புகின்றேன்.

அந்த வரிகள்….

“ஏற்கனவே உள்ள பாதையில் பயணிக்காதீர்கள். மாறாக, பாதையே இல்லாத இடத்தில் பயணித்து தடத்தை விட்டுச் செல்லுங்கள்.

நான் என்றோ படித்த இந்த வரிகள் என் கஷ்ட காலத்தில் நினைவுக்கு வந்து என்னுடைய தற்போதைய இந்த சிறந்த வாழ்க்கைக்கு அடித்தளமாக போனது என்பது தான் நிதர்சன உண்மை.

விளையாட்டாக சொன்ன பொய் செய்யாத தவறுக்கெல்லாம் பொறுப்பேற்க வைத்து என்னை வேலையில்லாமல், பணமில்லாமல் நிர்கதியாக நிற்க வைத்த நேரம் அது…

ஊழ்வினை நோயாக வந்து காலணை காலடியில் நிற்க வைத்து என்னை நன்கு பார்த்து விட்டு சென்ற நேரம் அது…

விற்க பொருளும் இல்லை; அடகு வைக்கவும் எதுவும் இல்லை என்ற நேரம் அது…

உற்றார், உறவினர் எங்கள் உறவை உதாசீனப்படுத்திய நேரம் அது…

ஆண்டாளை முதன் முதலாக உணர்ந்தபொழுதில் மேற்சொன்ன எமர்சனின் வரியையும் நினைவு வைத்து கொண்டு நான் தீர்மானமாக ஒரு முடிவெடுத்தேன்…

நான் என்னிடம் உள்ள ஒரு விஷயத்தால் புதிய பாதையை போட வேண்டும். அதில் எல்லோரையும் பிரயாணப்பட வைக்க வேண்டும் என்னை வெறுத்து ஒதுக்கிய அனைத்து நல் உள்ளங்களையும் ஒரு நாள் என்னை நினைத்து ஆச்சரிய பட வைக்க வேண்டும்….

அந்த வகையில் “வாஸ்து சாஸ்திரம்” பெரிய அளவில் எனக்கென்று ஓர் தனிப்பாதை அமைக்க உதவியது.

நான் கடந்து வந்த பாதையை பார்க்கின்றேன்

நிறைய சந்தோஷங்கள்,

நிறைய ஏமாற்றங்கள்,

நிறைய சங்கடங்கள்,

நிறைய பிரச்சினைகள்,

நிறைய பெரிய மனிதர்கள்,

நிறைய சிறிய மனிதர்கள் என ஆச்சரியப்பட வைக்கின்றது என் கடந்த காலம்.

என்னைப் பொறுத்தவரை கடந்த கால அனுபவத்தை வைத்து பார்க்கும் போது

ஆண்டாள் வாஸ்துவை நம்பி பின்பற்றியவர்களுக்கு இன்றும், என்றும் வெற்றி தான் எல்லா தளங்களில் இருந்தும் என்கின்ற உண்மை ஒரு பக்கம் என்றால்

அரைகுறை நம்பிக்கையுடன் எதை தின்னால் பித்தம் தெளியும் என்கின்ற மனநிலையில் வாஸ்து பார்த்த சிலருக்கு மட்டும் வெற்றி அரிதாகி போகிறது என்கின்ற உண்மை மறுபக்கம் என்கின்ற விஷயங்களையையும் என்னால் உணர முடிகின்றது.

மொத்தத்தில் எனக்கு தெரிந்த வாஸ்து பரிகாரம் இல்லாத, சரணாகதி தத்துவத்தை மட்டும் வலியுறுத்துகின்ற அடிப்படையில் சமரசம் செய்து கொள்ளாத வாஸ்து.

எனக்கு தெரிந்த வாஸ்துவை நான் நல்ல மனங்களுக்கு பரப்ப நினைத்ததற்கு காரணம் நான் அடுத்த தளத்திற்கு பிரயாணப்பட வேண்டும் என பிரியப்படுகின்றேன் என்கின்ற ஒரு விஷயம் தான்.

கௌபாய் தத்துவ மேதையான வில் ரோஜெர்ஸ், அழகாக சொல்வார்

உங்களது ஹாரனை அடிக்க ஒருவரை வேலைக்கு அமர்த்துங்கள். அது இரு மடங்கு தூரம் ஒலிக்கும் என்று.

மேற்சொன்ன வரிகள் மிக அற்புதமான வரிகள் என்னை பொறுத்தவரை-

காரணம் ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது என தீர்மானமாக நம்புகிறவன் நான்.

இவ்விடத்தில் அஸ்பேன் மரம் பற்றி நான் சொல்லியாக வேண்டும். உலகிலுள்ள மிக பெரிய உயரினம் அஸ்பேன் மரங்களின் புதர் ஆகும். அஸ்பேன் மரம் தனது வேரில் இருந்து கிளைகளை உருவாக்கி இனப்பெருக்கம் செய்கின்றது. இதன் கிளை என்பது தாய் மரத்திலிருந்து விலகி கிடைமட்டமாக வளரும் தண்டு அல்லது வேர் ஆகும். இது வேர் விட்டு புதிய மரமாக வளர்கின்றது. இந்த ஒப்பற்ற அஸ்பேன் புதரில் 41,000 மரங்கள் இருக்கின்றன என மதிப்பிடபட்டுள்ளது. அஸ்பேன் மரம் போல் மாற எனக்கு ஆசை வந்து விட்டது. அந்த ஆசைப்படி நான் எனக்கு தெரிந்த வாஸ்துவை அடுத்தவர்களுக்கு அதிலும் தகுதியானவர்களுக்கு சொல்லும்போது எனக்கு கிடைக்கும் பயன் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?!!!!!

Maga Andal’s Vastu – III  Practitioner Training Programme

ஆரம்பித்து தொடர்ந்து நடக்க போகின்ற தேதிகள்

01/10/15, 2/10/2015, 3/10/2015 and 4/10/2015 @ Chennai

10/10/2015 and 11/10/2015 @ Coimbatore

16/10/2015, 17/10/2015 and 18/10/2015 @ Madurai

வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு பிரயாணப்பட விரும்புகின்றவர்கள் உங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம், பிறந்த நேரம் போன்ற விஷயங்களை எங்களுக்கு அனுப்பி பின் நீங்கள் இதற்கு தகுதியானவர்களா என தெரிந்து கொண்டு உங்களுக்கு பிற விஷயங்கள் தோதுபடும் பட்சத்தில் எங்கள் பயிற்சியில் பங்கு பெற அன்புடன் அழைக்கின்றோம்.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. என்னைப் போன்று அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்றவாறு (தொடர்ந்து 10 நாட்கள் விடுப்பு எடுக்க. இயலாததால்) 3 கட்டமாக பிரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பிறந்த தேதி :05.03.1962 (ஸ்ரீ பிலவ வருடம் மாசி மாதம் 22ம் தேதி திங்கள் கிழமை காலை மணி 8.40 க்கு மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம் என்ற ஊர்.119

    Reply

Write a Reply or Comment

1 × 1 =