வாஸ்து – எனக்கு கொடுத்த அற்புத வரங்கள் – 1

ஸ்ரீ சபரி தன்னை தாயாக்கி கடவுளை குழந்தையாக பார்த்தாள்… மீரா தன்னை காதலியாக்கி கடவுளை காதலனாக பார்த்தாள்… ஆண்டாள் மட்டும் தான் தன்னை மனைவியாக்கி கடவுளை கணவனாக பார்த்தாள்… அந்த வகையில் அரங்கனையே தனதாக்கி கொண்ட ஆண்டாளுடைய அன்பின் அளவு அளவிடமுடியாதது. இதனால் தான் என்னவோ ஒவ்வொரு முறை ஆண்டாள் தாயாரை பார்க்கும் போதும் பார்க்கும் அந்த நொடியே இறப்பை தழுவ வேண்டும் என்கின்ற எண்ணம் என் மனம் முழுவதும் வியாபிக்கும். ஆண்டாளை தரிசனம் செய்யும் அந்நேரத்தில் […]

வாஸ்து தகவல்கள்:

தற்போது கட்டப்பட்டு கொண்டியிருக்கும் இந்த கட்டிடத்தில், கழிவறையின் தரைத்தளம் மற்ற தரைத்தளத்தை விட உயரமாக இருக்கின்றது. இது தவறு.

Vastu Tips

பொதுவாக தெரு தாக்கத்தை தவிர்க்க பரிகாரமாக தெருவிற்கு எதிரே பிள்ளையார் வைப்பதே தவறு. அதிலும் குறிப்பாக ஒரு நல்ல தெருக்குத்து உள்ள இடத்தில் பிள்ளையார் வைப்பது மிகப்பெரிய தவறு. ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை உணர்ந்தவர்களும் இந்த தவறை செய்கிறார்கள். உதாரணமாக சென்னையில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டலான தாஜ் கோரமண்டல் அருகில் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் ஆலோசனை படி கட்டப்பட்ட இந்த கட்டிடம் ஒரு நல்ல தெருக்குத்து(வடகிழக்கு வடக்கு) உள்ள இடம். இருந்தாலும் இந்த உண்மை உணராமல் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.

Vastu Tips

இது வடக்கு பார்த்த வீடு. வடகிழக்கில் பள்ளம் நல்லது. ஆனால் வடகிழக்கு மூலையை துண்டித்து(Cut செய்து) பள்ளம் அமைக்கக்கூடாது.    

கடிதம் – 31 – ரங்கநாதனும் ஆண்டாளும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… எங்கே தன் மருத்துமனையில் ஒருவர் இறந்து விட்டால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்று எண்ணி என் தந்தையை அவசரகதியாக வெளியே தள்ளி விட்ட மருத்துவரின் மருத்துவமனையில் என் தந்தை இறப்பதற்கு முதல் நாள் இரவே, அவர் என்னிடம், இந்த மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை செய்தால் பணம் அதிகமாக செலவாகும். நீயே இப்போது தான் கஷ்டப்பட்டு […]

கடிதம் – 30 – இறப்பும், பிறப்பும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… 28 May 1999 உடல்நிலை சரியில்லை என்று என் தந்தை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். 29 May 1999  அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது. 30 May 1999 காலை வழக்கம் போல் விடியல் விடிந்திருந்தது யாருக்கும் காத்திருக்காமல். எனக்கு அன்று என்ன காத்திருக்கின்றது என்று தெரியாமல் நானும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by