கட்டப்பட்ட வீட்டின் மதில் சுவர் சதுரம் அல்லது செவ்வகமாக இல்லாமல் கோணலாக இருந்தால் என்ன செய்வது?

படித்தில் உள்ள படி புதியதாக Sheet போட்டு கூட மதில் சுவரை சதுரம் அல்லது செவ்வகமாக அமைத்து கொள்ளலாம்.

ஒரு வீட்டின் தாய் சுவரின் முனைகள் துண்டித்து(உடைந்து) இருக்கலாமா?

ஒரு வீட்டின் தாய் சுவரில் எந்த முனையும் துண்டிக்கப்படாமலும், உடையாமலும் இருக்க வேண்டும். மேலே உள்ள படத்தில் இரண்டு இடங்களில் தாய் சுவர் முனைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இது தவறு.

ஒரு கட்டிடத்தில் மதில் சுவர் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்?

ஒரு கட்டிடத்தில் மதில் சுவர் தாய் சுவருக்கு இணையாகவும் மற்றும் நேராகவும் அமைக்கப்பட வேண்டும். இரண்டிற்கும் உள்ள இடைவெளி சம சீராகவும் ஒரே அளவாகவும் இருக்க வேண்டும்.

படத்தில் உள்ள படி வீட்டிற்குள் மரம் / செடி வளர்க்க தனியாக தடுப்பு சுவர்(பாத்தி கட்டுதல் போன்ற அமைப்பு) கட்டுதல் சரியா?

வீட்டிற்குள் மரம் / செடி வளர்க்க தனியாக தடுப்பு சுவர்(பாத்தி கட்டுதல் போன்ற அமைப்பு) அமைப்பது தவறு.

Vastu Tips

ஒரு கட்டிடத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பக்கத்து வீட்டின் மரம் / கொடி / செடியின் கிளைகள் வரக்கூடாது.

Vastu Tips

பொதுவாக தெரு தாக்கத்தை தவிர்க்க பரிகாரமாக தெருவிற்கு எதிரே பிள்ளையார் வைப்பதே தவறு. அதிலும் குறிப்பாக ஒரு நல்ல தெருக்குத்து உள்ள இடத்தில் பிள்ளையார் வைப்பது மிகப்பெரிய தவறு. ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை உணர்ந்தவர்களும் இந்த தவறை செய்கிறார்கள். உதாரணமாக சென்னையில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டலான தாஜ் கோரமண்டல் அருகில் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் ஆலோசனை படி கட்டப்பட்ட இந்த கட்டிடம் ஒரு நல்ல தெருக்குத்து(வடகிழக்கு வடக்கு) உள்ள இடம். இருந்தாலும் இந்த உண்மை உணராமல் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by