திருப்பாவை பாடல் 17: (கண்ணன் குடும்பத்தவரை எழுப்புதல்) அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்! அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய். விளக்கம் : ஆடைகளையும், அன்னத்தையும், குளிர் நீரையும் தானமாக தந்து அறம் செய்யும் தலைவரான நந்தகோபனே துயில் எழுக! கொடியிடை கொண்ட பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே… ஆயர் குலத்தை […]