ஸ்ரீ “மூன்று வேலை சோறு போட்டு நன்கு பார்த்து, பார்த்து வளர்த்தாலும் அமாவாசையன்று மட்டும் சொல்லி வைத்தாற்போல் காணாமல் போய்விடும் காக்கா” என்று கிராமங்களில் சொல்வார்கள்… காக்காவின் அமாவாசை செயலே பரவாயில்லை என்று மெச்சும் அளவிற்கு ஒரு கீழ்த்தரமான செயலை சமீபத்தில் நான் கடந்து வர நேரிட்டது. எனக்கு பிடித்த கோவில் ஒன்றில் அன்னதானத்திற்காக அரிசி கேட்டிருந்தார்கள். கேட்டதை திரட்டி கொடுத்தேன். கடைசியில் கொடுக்கப்பட்ட அரிசியில் 85% அன்னதானத்திற்கு உபயோகப்படுத்தாமல் அதை என்னிடம் வாங்கியவர்கள் தங்கள் சொந்த […]