ஆச்சரிய அதிசய தமிழக கோவில்கள்…
சிவயோகிநாதர் கோவில்: பொதுவாக ஆலயங்களில் ஒரே ஒரு தல விருட்சம்தான் இருக்கும். ஒரு சில கோவில்களில் அபூர்வமாக இரண்டு அல்லது மூன்று கூட இருக்கும். ஆனால் கும்பகோணம் அருகில் உள்ள #திருவிசநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவிலில், #8 தல விருட்ச மரங்கள் இருக்கும் #அதிசயத்தைக் காணலாம். வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என இங்கு எட்டு தலவிருட்சங்கள் இருக்கின்றன. மேலும் இந்த ஆலயத்திற்குள் நுழையும் போது, நந்திதான் முதலில் உள்ளது. […]
திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில்: தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 48வது சிவத்தலமாகும். மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மகாசிவராத்திரி விழா மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தலச் சிறப்பு : சோழர் காலப் பாணியில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மகாசிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு காரணமான தலம். இத்தலத்தில் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி […]
நாட்டில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தனி சிறப்பும் அதிசயங்களும் இருக்கும். அந்த வகையில் ஒரு திருத்தலத்தில் மூடப்பட்ட கோவிலில் தொடர்ந்து 6 மாதங்கள் விளக்கு எரியும் விளக்கு….!
1. #திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. 2. #ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. 3. #தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது. 4. #தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற […]
தலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்!! இந்தியாவில் உள்ள பல முக்கிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன. அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் நிகழ்கிறது.
கருவளா்ச்சேரியில் அகத்தியர்: கும்பகோணம் மருதாநல்லூா் அருகிலுள்ள,கருவளா்ச்சேரி திருக்கோயில். #வரலாறு : லோக மாதாவாம் அம்பிகை ‘கரு’ காக்கும் நாயகியாக, சுயம்பு மூர்த்தமாக, அகிலாண்டேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. குழந்தை வரம் தருவதுடன், கர்ப்பப்பையில் வளரும் கருவையும் பாதுகாப்பவள் ஆதலால் அம்பிகைக்கு, ‘கருவளர்நாயகி’ என்றும் ஒரு பெயர் உண்டு. புற்று மண்ணால் ஆன சுயம்புத் திருமேனி ஆதலால் அம்பிகைக்கு அபிஷேக- ஆராதனைகள் கிடையாது; புனுகுச் சட்டம், சாம்பிராணி மற்றும் தைலக்காப்பு மட்டுமே […]
அத்ரி கங்கா #அகத்திய மாமுனிவர், கோரக்கநாதர் வாசம் செய்த புண்ணிய ஸ்தலமாக #திருநெல்வேலி விளங்குகிறது. இதில், ஒன்று ‘அத்ரிமலை’ எனும் மூலிகை மலை. இதைத்தான், ‘பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்’ என பாடினர். ‘இம்மூலிகை தென்றல் உடலில் பட்டாலே போதும் நோய்கள் விலகியோடும்,’ என்பது நம்பிக்கை. இம்மலையில் அத்ரிமகரிஷி வாசம் செய்தார். சீடர்கள் தியானம் செய்த இடம், மூலிகை மருந்து தயாரித்த இடம் போன்றவை காலத்தால் அழியாத காவியம் போல் இன்றளவும் பசுமையாக காட்சியளிக்கிறது. இம்மலைக்கு […]
ஸ்ரீ சாரதாம்பா கோவில் : இந்தியாவின்கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் துங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள நகரமாகும். சிறப்பு: இங்கு ஆதிசங்கரர் நிறுவியதாகக் கருதப்படும் அத்வைத பீடம் (ஸ்ரீ சாரதா பீடம்) மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. புராண கதைகளின்படி, ஆதி சங்கரர் இந்த இடத்தில் ஒரு தவளை நாகத்திற்கு கடும் வெயிலில் குடை பிடிப்பதைக் கண்டு வியந்து , தனது சிஷ்யர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கான இடமாக தேர்ந்தெடுத்து உள்ளார். இயற்கையின் விதிகளை மீறி […]
ஒத்தாண்டேஸ்வரர்: திருவள்ளுர் அடுத்த திருமழிசையில் உள்ள ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் இலட்ச தீபத் திருவிழா நடந்தது. இதில் கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றபட்டது. திருமழிசை : திருமழிசை, ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில், நேற்று (டிச.11ல்) 19ம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடந்தது. வெள்ளவேடு.அடுத்த, திருமழிசையில் அமைந்துளளது குளிர்ந்தநாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் கோவில். மூலவர் – ஒத்தாண்டேஸ்வரர் அம்மன் – குளிர்வித்த நாயகி தல விருட்சம் – வில்வம் தீர்த்தம் – தெப்பம் பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன் […]