திருப்பாவை பாடல் 10: (கதவை திறக்க) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். விளக்கம் : சென்ற பிறவியில் நாராயணனை எண்ணி விரதம் இருந்து அதன் பயனாக இப்பிறவியில் சொர்க்கத்தில் இருப்பது போன்று சுகம் பெற்றுக் கொண்டிருக்கும் அம்மையே! மாற்றம் […]