என்.டி.ராமராவ் மகனும் நடிகருமான ஹரி கிருஷ்ணா விபத்தில் பலி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 61. ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான என்.டி ராமாராவின், நான்காவது மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர், பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து பணியாற்றினார். எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இவர் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள […]