ஒரு இடத்தில் கட்டிடம் கட்டும் போது அந்த இடத்தின் எல்லை வரை கட்டிடம் கட்டக்கூடாது. அதாவது அந்த இடத்தின் நான்கு புறமும் மதில் சுவர் அமைத்து, மதில் சுவரின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை ஒட்டியவாறு கட்டிடம் கட்ட வேண்டும். ஒரு இடத்தின் மதில் சுவருக்கும், கட்டிடத்தின் தாய் சுவருக்கும் உள்ள இடைவெளியானது மேற்கு பகுதியை விட கிழக்கு பகுதியில் அதிகமாகவும், தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியில் அதிகமாகவும் இருக்க வேண்டும்.