ஒரு இடத்தில் ஆழ்துளை கிணற்றிற்காக அமைக்கப்படும் மோட்டார் அறை (Motor Shed) மதில் சுவரை ஒட்டி அமைக்கலாமா?

ஒரு இடத்தில் ஆழ்துளை கிணற்றிற்காக அமைக்கப்படும் மோட்டார் அறை (Motor Shed) மதில் சுவரை ஒட்டி அமைக்க கூடாது. படத்தில் உள்ள இடம்: பட்டினப்பாக்கம், சென்னை

ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடம் அந்த இடத்தின் எல்லை வரை கட்டலாமா?

ஒரு இடத்தில் கட்டிடம் கட்டும் போது அந்த இடத்தின் எல்லை வரை கட்டிடம் கட்டக்கூடாது. அதாவது அந்த இடத்தின் நான்கு புறமும் மதில் சுவர் அமைத்து, மதில் சுவரின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை ஒட்டியவாறு கட்டிடம் கட்ட வேண்டும். ஒரு இடத்தின் மதில் சுவருக்கும், கட்டிடத்தின் தாய் சுவருக்கும் உள்ள இடைவெளியானது மேற்கு பகுதியை விட கிழக்கு பகுதியில் அதிகமாகவும், தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியில் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

கட்டப்பட்ட வீட்டின் மதில் சுவர் சதுரம் அல்லது செவ்வகமாக இல்லாமல் கோணலாக இருந்தால் என்ன செய்வது?

படித்தில் உள்ள படி புதியதாக Sheet போட்டு கூட மதில் சுவரை சதுரம் அல்லது செவ்வகமாக அமைத்து கொள்ளலாம்.

ஒரு கட்டிடத்தில் மதில் சுவர் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்?

ஒரு கட்டிடத்தில் மதில் சுவர் தாய் சுவருக்கு இணையாகவும் மற்றும் நேராகவும் அமைக்கப்பட வேண்டும். இரண்டிற்கும் உள்ள இடைவெளி சம சீராகவும் ஒரே அளவாகவும் இருக்க வேண்டும்.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by