அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் திருக்கோயில் வரலாறு மூலவர் : கதிர்வேல் எனும் திருக்கைவேல் ஊர் : கோவில்பட்டி மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். முற்காலத்தில் முருகன் ஆலயம் என்பது வேல் கோட்டமாகவே அமைந்திருந்தது. அதாவது வேல் அமைத்து வழிபடும் முறையே இருந்தது. காலப்போக்கில்தான் முருகப்பெருமானின் சிலைகளை வடித்து வைத்து வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் மூலவராக இருப்பது வேல்தான். […]