திருப்பாவை பாடல் 06: (பல்வகை ஒலிகள்) புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மௌ;ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பொருள் : வானம் வெளுத்து ஆதவன் தோன்றி பறவைகள் எல்லாம் எழுந்து மாறி மாறி ஒலிக்கத் துவங்கிவிட்டன. கருடனுக்கு அரசனான பெருமாளின் திருக்கோவிலில் […]