அமிர்தநாராயணப் பெருமாள்: சுவாமி : அமிர்தநாராயணப் பெருமாள். அம்பாள் : அமிர்தவள்ளி. தலச்சிறப்பு : ராமானுஜர் வழிபட்ட தலம். அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரரை தரிசித்த பிறகு, அமிர்த நாராயண பெருமாளையும் தரிசனம் செய்தால் தான், திருக்கடையூர் வழிபாட்டு பலன் முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. திருத்தல வரலாறு : தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தனர். அசுரர்களை ஏமாற்றி விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார். மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது. […]