சேவா இன்டர்நேஷனல் வழங்கிய ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் சென்னை CCGS

  சேவா இன்டர்நேஷனல் வழங்கிய ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் சென்னை CCGS உடன் இணைந்து நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு வட்டம் #மாணிக்கம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொடுக்கப்பட்டது, இந்த நிகழ்வில் #பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ். சேகர் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை மருத்துவர்களிடம் ஒப்படைத்தார் மேலும் அவருடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில பொருளாளர் பெரியமணலி திரு.சரவணன், பேரவையின் மாவட்ட பொருப்பாளர்கள் திரு. இளமுருகன், […]

#சேவாஇன்டர்நேஷனல், CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெரம்பலூரில்

  #சேவாஇன்டர்நேஷனல், CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் (Oxygen Concentrators) மற்றும் #மருத்துவ உபகரணங்கள் பெரம்பலூரில் வழங்கிய போது எடுத்த படம். விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்த என் கல்லூரி நண்பரும் அன்பு சகோதரரும் ஆன மாண்புமிகு #அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களுக்கும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு. எம்.பிரபாகரன் அவர்களுக்கும் மற்றும் #பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. வெங்கட பிரியா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி…

சேவாஇன்டர்நேஷனல், CCGS, மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை கிருஷ்ணகிரியில்

#சேவாஇன்டர்நேஷனல், CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து #ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் (Oxygen Concentrators) மற்றும் #மருத்துவ உபகரணங்கள் #கிருஷ்ணகிரியில் வழங்கிய போது எடுத்த படங்கள். விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்த அன்பு சகோதரர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோக் குமார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்…    

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில்,19.06.21 நாமக்கல் களங்காணியில் சவரத் தொழிலாளர்கள் 100 குடும்பத்திற்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நேற்று 19.06.21 நாமக்கல்லில் துப்புரவு தொழிலாளர்கள் 50 பேருக்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது  

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 19.06.21 நாமக்கல்லில் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு திருநங்கைகள் 100 பேருக்கு வழங்கப்பட்டது….

திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு உணவுப் பொருட்கள்…

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் மற்றும் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு உணவுப் பொருட்கள் (அரிசி மற்றும் மளிகை பொருட்கள்) வழங்கியபோது எடுத்த படங்கள்

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு….

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக நாமக்கல்லில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், சிகிச்சை பெற வருபவர்களுக்கும் முகக்கவசம், கையுறை மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்து வருகின்றோம் மேலும் 02.06.2021 அன்று இவர்களுக்கும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு வழங்கிய போது… நன்றி:Hotel SRI ANANDAS,Namakkal  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by