திருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது #108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் #திருநாங்கூரில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் #பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை. பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே தோற்றத்தில் இங்கும் காணப்படுகிறார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் […]