கோவர்த்தனாம்பிகை திருக்கோயில்: இத்தலத்தில் அம்பாள் மேற்கு நோக்கி தவம் புரிந்ததால் சிவனும் மேற்கு நோக்கிய படியே அருட்காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் தனிச்சன்னதியில் உச்சிப்பகுதியில் #சிங்கமுக உருவம் கொண்ட திருவாசியின் மீது நின்ற கோலத்தில் தலையில் கடிண்ட மகுடத்துடன், மேற்கு நோக்கியபடி கைகளில் தாமரை, குவளைகள் கொண்டு அம்மன் காட்சி தருகிறாள். அம்பாள் தவம் இருந்து மக்களைக் காத்து அருளிய இப்பகுதி பழனங்கள் (வயல்வெளி) நிறைந்த பழமையான பகுதியாக இருந்ததால் இவ்வூர் தொடக்கத்தில் #பெரும்பழனம் என்றும் பெரும்பழனாபுரி […]