பாடல் 28: கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய். பொருள்: குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் […]