திருப்பாவை பாடல் 17:

திருப்பாவை பாடல் 17: (கண்ணன் குடும்பத்தவரை எழுப்புதல்) அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்! அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய். விளக்கம் : ஆடைகளையும், அன்னத்தையும், குளிர் நீரையும் தானமாக தந்து அறம் செய்யும் தலைவரான நந்தகோபனே துயில் எழுக! கொடியிடை கொண்ட பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே… ஆயர் குலத்தை […]

திருப்பாவை பாடல் 16:

திருப்பாவை பாடல் 16: நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய். விளக்கம் : எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபனின் அரண்மனையைக் காவல் செய்பவனே! கொடிகளும் தோரணங்களால் கட்டப்பட்ட வாசல் காவலனே! நெடுங்கதவை திறப்பாயாக…!! மாயன் மணிவண்ணன் ஆயர்குல சிறுமியரான […]

திருச்செந்தூர் நிலாச்சோறு!!

திருச்செந்தூர் நிலாச்சோறு!! என்ன இயற்கை இடையூறுகள் வந்தாலும் பௌர்ணமி அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் அன்னதானம் திருச்செந்தூரில் தொடர்ந்தது தொடரும் தொடர்ந்து கொண்டிருக்கும்… நேற்று (29.12.2020) அன்னதான புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி…    

திருப்பாவை பாடல் 15:

திருப்பாவை பாடல் 15: (உரையாடல்கள்) எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன் வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய். விளக்கம் : இளமையான கிளியை போன்ற அழகிய பேச்சை உடைய பெண்ணே…! பொழுது விடிந்தும் இன்னும் உறங்கி கொண்டு இருக்கின்றாயே? நாங்களெல்லாம் […]

திருப்பாவை பாடல் 14:

திருப்பாவை பாடல் 14: (பரமனைப் பாடுவோம் எனல்) உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய். விளக்கம் : உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து இதழ்கள் விரிந்துவிட்டன. ஆம்பல் மலர்கள் தலை […]

திருப்பாவை பாடல் 13:

திருப்பாவை பாடல் 13: (தோழி எழுக) புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். #விளக்கம் : கொக்கின் வடிவத்தில் வந்த பகாசுரன் என்னும் அரக்கனை, அவனது வாய் அலகுகளை தனது கைகளால் பற்றி இரண்டாக கிழித்து எறிந்து […]

திருப்பாவை பாடல் 11:

திருப்பாவை பாடல் 11: (விழித்து எழுக) கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். விளக்கம் : கன்றுகளை ஈன்று மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய போர் செய்யும் இடையவர்களின் குலத்தில் தோன்றிய […]

திருப்பாவை  பாடல் 10:

திருப்பாவை பாடல் 10: (கதவை திறக்க) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். விளக்கம் : சென்ற பிறவியில் நாராயணனை எண்ணி விரதம் இருந்து அதன் பயனாக இப்பிறவியில் சொர்க்கத்தில் இருப்பது போன்று சுகம் பெற்றுக் கொண்டிருக்கும் அம்மையே! மாற்றம் […]

திருப்பாவை பாடல் 9:

#திருப்பாவை #பாடல் 9: (நாமம் நவில்வோம் எனல்) தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும் மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். விளக்கம் : எழிலும், தூய்மையும் கொண்ட மணிகளால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிலும் விளக்குகள் பிரகாசமாக ஒளிவிட, நறுமணம் நிறைந்த சந்தனம் அகில் […]

திருப்பாவை பாடல் 03:

திருப்பாவை பாடல் 03: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். பொருள் : சிறுவனாக சென்று மகாபலி மன்னனிடம் மூன்றடி மண்ணை பெற்று பின்பு விஸ்வரூபமெடுத்து மூன்று உலகங்களையும் தன்னுடைய திருப்பாதங்களால் அளந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by