தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன. கோயில் தகவல்கள்: மூலவர்: கோலவில்லி ராமன் உற்சவர்: சிருங்கார சுந்தரன் தாயார்: மரகதவல்லி தல விருட்சம்: கதலி வாழை தீர்த்தம்: சுக்ரதீர்த்தம், ப்ரஹமதீர்த்தம், பரசுராமதீர்த்தம், இந்திர தீர்த்தம். […]