காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கோ தானம்

கோ தானம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் இன்று (06.12.2021) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உத்தரமேரூர் ஒன்றியம் பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த திரு.வரதன் என்பவருக்கு கறவை பசுவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.ஆ.மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.  

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், 

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், பணிவு தரும் அம்பிகை:  அம்பாள் சாந்தநாயகி, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இவளே, இங்கு பிரதானமானவள் ஆவாள். எனவே, கோயிலுக்குச் செல்பவர்கள் முதலில் இவளை வணங்கிவிட்டே, சிவன் சன்னதிக்குச் செல்கிறார்கள். இதற்காக, நுழைவு வாயிலை அடுத்து அம்பாள் சன்னதி முதலில் அமைக்கப்பட்டிருக்கிறது. அம்பாளை வெளியில் இருந்து பார்க்கும்போது, முகத்தை தரிசிக்க முடியாதபடி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சற்றே குனிந்து பார்த்தால்தான் அம்பிகையை […]

சத்யநாதர் திருக்கோயில்: 

சத்யநாதர் திருக்கோயில்: ஏழு சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி:  பொதுவாக தெட்சிணாமூர்த்தி சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுக்கு ஞானம் போதித்த நிலையில்தான் காட்சிதருவார். ஆனால், இங்கு அவருக்கு கீழே 7 சீடர்கள் இருக்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் ஞானம் பிறக்கும் என்பது ஐதீகம். சத்யநாதசுவாமி சற்றே சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறார். அம்பாளுக்கு காரார்குழலி என்ற பெயரும் உள்ளது. நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு முகமாக திரும்பியிருக்கிறது. இதற்கு நேரே ஒரு வாசலும் உண்டு. […]

தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்:

தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்: தேவர்கள் படைக்கு தலைமையேற்று சம்ஹhரத்திற்கு சென்றதால் இத்தலத்து சிவன், தெய்வநாயகேஸ்வரர் என்றும், அரம்பையர்களுக்கு அருளியதால், அரம்பேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இதனால், அரம்பையங்கோட்டூர் எனப்பட்ட இத்தலம் காலப்போக்கில் எலும்பியங்கோட்டூர் என்று மருவியது. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தீண்டாத்திருமேனியான சிவன், கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார். […]

கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்

கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்: #குபேரன், தன் முற்பிறவியில் செய்த புண்ணியபலனால், அருந்தமனின் மகனாப்பிறந்து, அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன், அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான். எனவே, இங்கு சிவனை வேண்டி தன்னை காக்கும்படி வேண்டினான் குபேரன். சிவன், அவனுக்காக #சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்கினார். இத்தலத்தில் சிவன், பெரிய லிங்கவடிவில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். #காஞ்சி காமாட்சி அம்மனே சிவனுக்குரிய அம்பாள் என்பதால், இங்கு அம்பாளுக்கு சன்னதி இல்லை. விநாயகர் பிரதிஷ்டை செய்த லிங்கம் […]

உங்களால் நாங்கள் உங்களுக்காகவே நாங்கள் …

உங்களால் நாங்கள் உங்களுக்காகவே நாங்கள் … நாளை 25-11-2018 அன்று இடம்: தூசி   பாலிடெக்னிக் காலேஜ், காஞ்சிபுரம் #தூசி_பாலிடெக்னிக்_காலேஜ், #காஞ்சிபுரம்  

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்:

  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்: திருக்கச்சியேகம்பம் – எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். அதிசயங்கள் :  மூலவர் : ஏகாம்பரநாதர் அம்மன் : காமாட்சி தல விருட்சம் : மாமரம்  பழமை : 1000 – 2000 ஆண்டுகள் தல வரலாறு : கைலாயத்தில் சிவன் யாகத்தில் இருந்தபோது அம்பாள் அவரது இரண்டு […]

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை…

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் வரும் புதன்கிழமை(04-03-2015) அன்று இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by