திருப்பாவை பாடல் 16: நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய். விளக்கம் : எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபனின் அரண்மனையைக் காவல் செய்பவனே! கொடிகளும் தோரணங்களால் கட்டப்பட்ட வாசல் காவலனே! நெடுங்கதவை திறப்பாயாக…!! மாயன் மணிவண்ணன் ஆயர்குல சிறுமியரான […]