மறக்க முடியாத புகைப்படம்….

ஸ்ரீ

Vastu - SSLC

நான் S.S.L.C – யில் எடுத்த மொத்த மதிப்பெண் 500-க்கு 379.  அது என்னவோ தெரியவில்லை அன்றிலிருந்து எனக்கு தெரிந்தவர்கள் மாநில அளவில் இடம் பிடிக்கும் பட்சத்தில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டுமென்று ஒரு பெரிய கனவு எனக்குள் இருந்து வந்தது.

சமீபத்தில் S.S.L.C – யில் மாநில அளவில் 3 – ம் (497/500) இடம் பிடித்த மாணவர் K.ராஜ்குமார் அவர்களை சந்தித்தபோது அந்த கனவு நிறைவேறியது. அப்போது  எடுத்து கொண்ட புகைப்படம்.

என்னுடன் புகைப்படத்தில் இருப்பவர்கள்: – மாணவர் ராஜ்குமார், மாணவரின் தந்தை திரு.கார்த்திகேயன், தாயார் திருமதி.கார்த்திகேயன், குமாரபாளையம் திரு.ராஜ்குமார், திருமதி.ராஜ்குமார், சேலம் ரங்கநாதன் மற்றும் சென்னை அபுதாலிப்

மாணவர் படித்த பள்ளி: – S.S.M லக்ஷ்மி அம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி, குமாரபாளையம்.

அந்த மாணவரை சந்தித்த பிறகு என் நீண்ட நாள் கனவு நிறைவேறியது ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தது என்றால் மற்றொரு பக்கம் அந்த மாணவருடைய அப்பா என்னை குமாரபாளையத்தில் உள்ள அவர் இடத்தில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் அவர் வீட்டின் வாஸ்து ஆலோசகராக என்னை தேர்ந்தெடுத்தது எனக்கு அதைவிட மட்டற்ற பெரிய மகிழ்ச்சியை அளிக்கின்றது.

ஆண்டாள் அருளால் மாணவர் ராஜ்குமார் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

five − 1 =