அரங்கனின் ஆண்டாள் – ஒரு ஆச்சரிய குறி!!!

ஸ்ரீ

gratitude

சமீபத்தில் என்னை ஒரு பெண்மணி திருப்பூரிலிருந்து நேரடியாக என் தொலைபேசி எண் அவளுக்கு கிடைக்கப்பெற்று பேசினார். பேசினவர் தன் குழந்தைகளை படிக்க வைக்க ஆண்டாள் கல்வி திட்டம் மூலம் உதவுமாறு என்னை கேட்டுக் கொண்டார்.

“உங்களுக்கு எப்படி என்னை தெரியும் என்று கேட்டதற்கு

அவர் சொன்னார் உங்களுடைய வாஸ்து வாடிக்கையாளர் ஒருவர் உங்களைப் பற்றி சொன்னதால் திருப்பூரை சேர்ந்த உங்கள் நண்பர் திரு.நாகேந்திரன் அவர்களிடம் பேசி பின் அவரிடம் உங்களின் தொலைபேசி எண்ணை வாங்கி என்னிடம் பேசுவதாக சொன்னார்.

நான் சொன்னேன் “அம்மா! நாகேந்திரன் அவர்களையே உங்களைப் பற்றி விசாரிக்க சொல்லி பின் அவர் சொல்லும் பதிலை வைத்து அவருக்கு உதவுவதாக அவரிடம் சொன்னேன். நண்பர் திரு.நாகேந்திரன் அவர்களும் என்னிடம் தொலைபேசியில் பேசின பெண்மணியின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கே சென்று உண்மை நிலையை ஆராய்ந்த பின் அவர்கள் கோரிக்கை உண்மையானது என்று என்னிடம் தகவல் சொன்னார். கூடவே அவரே “சார்! மொத்தம் ரூ.30000/- தேவைப்படுகின்றது. நான் ரூ.15000/- த்தை கொடுத்துவிடுகின்றேன் நீங்கள் ரூ.15000/- மட்டும் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

நானும் சரியென்றேன்.

அடுத்த நாள்

திருப்பூர் முருகப்பா செட்டியார் மேல்நிலை பள்ளியில் படிக்கும் அந்த பெண்மணியின் இரண்டு பெண் குழந்தைகளின் படிப்புக்கும் தேவைப்படும் மொத்த பணமான ரூ.30000/–த்தை அவரும், நண்பர் திரு.பூபதி, திருப்பூர் அவர்களும் சேர்ந்து கொடுத்து விட்டதாக கூறினார். பள்ளியில் பணத்தை கட்டிய பின் அந்தப் பெண்மணி என்னிடம் சொன்னதை கேட்டு சப்தநாடியும் ஒடுங்கி போய் விட்டது.

அந்த பெண்மணி சொன்னது

“ஐயா! திருப்பூரில் உள்ள என் அக்கா வீட்டிற்கு நீங்கள் வாஸ்து பார்த்திருக்கிறீர்கள். நான் உங்கள் Programme – ஐ நிறைய டிவியில் பார்த்திருக்கின்றேன். உங்கள் பேச்சை கேட்டு என் ஒரு பெண் குழந்தையிடம் எங்கள் வீட்டின் கடைசி தங்கம் என இருந்த 2 gm தங்க தோடை ஆண்டாளுக்கு 2 வருடங்களுக்கு முன் என்னை அறியாமல் கொடுத்து விட்டேன். என் குடும்ப பிரச்சினை மிகவும் அதிகமானதால் போன வாரம் ஆண்டாளை போய் பார்த்து வந்தேன். அந்த ஆண்டாள் என்னை காப்பாற்றி விட்டாள்”

சொல்லிவிட்டு அவள் அடுத்த வேலையை பார்க்க போய்விட்டாள். நான் தான் இன்னும் அவள் சொன்ன வார்த்தைகளை எண்ணி பார்த்து கொண்டிருக்கின்றேன்.

கொடுக்காமல் கிடைக்கும் என நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் எதையும் எதிர்பாராமல் கொடுத்து தனக்கு தேவையானவற்றை பெற்று கொண்ட இவள் யார் என இவளுக்கு தெரியாது? ஆனால் எனக்கு தெரியும்

இவளும் யாரென்று!!!

இவளுக்கு பணம் கொடுத்து உதவிய திருப்பூர் நாகேந்திரனும், திருப்பூர் பூபதியும் யாரென்று!!!

தெரிந்ததால் உணர்ந்து சொல்கின்றேன். வாழ்க்கையை உணர வைத்த இந்த மூவர் பாதம் தொட்டு நன்றி என…

இவர்கள் வாழும் காலத்தில் என்னையும் வாழ வைத்து கொண்டிருக்கும் மகா சக்தியான ஆண்டாளுக்கும் மகா நன்றி…

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. THANKS SIR FOR KEEPING SUCH A HUMANITARIAN MIND SET. ALWAYS IT IS BETTER TO INVESTIGATE AND EXTEND OUR CHARITY .

    Reply

Write a Reply or Comment

5 × 1 =