“நாமக்கல்லின் நவீன நம்மாழ்வார்” திரு.நாகராஜன்

ஸ்ரீ

Vastu - Pasumai Vikatan - Nagharajhanஇயற்கையில் இனிக்கும் கத்திரி!

கத்திரிக்காய் சாம்பார் இல்லாத கல்யாணமோ, விஷேச நிகழ்ச்சிகளோ கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, நாம் உணவில் பயன்படுத்தும் தவிர்க்க முடியாத காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது, கத்திரிக்காய். அதேநேரத்தில் அதிகளவு நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் காய்கறிகளிலும் கத்திரிக்கு இடமுண்டு. இதன் காரணமாக, ரசாயன விவசாயிகளே கத்திரி பயிரிடத் தயக்கம் காட்டும் நிலையில்… இயற்கை முறையில் பயிரிட்டு சோதனை முயற்சிலேயே லாபத்தை லட்சங்களில் அறுவடை செய்திருக்கிறார், என்னுடைய மிகச் சிறந்த நல்ல நண்பர் மற்றும் என் குடும்ப உறுப்பினருமான நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள இலுப்புலி கிராமத்தை சேர்ந்த “நாமக்கல்லின் நவீன நம்மாழ்வார்” திரு.நாகராஜன்.

திரு.நாகராஜன் அவர்கள் எனக்கு அறிமுகம் ஆன சில மாதங்களிலேயே என்னை திருச்செங்கோட்டில் ஆண்டாள் தங்க விமானத் திருப்பணிக்காக பேச வைத்து ஏறத்தாழ Rs.10 லட்சம் வரை தங்க விமானத் திருப்பணிக்காக திரட்டி கொடுத்தவர். திரு.நாகராஜன் அவர்களை பற்றி 10-05-2015 பசுமை விகடனில் சிறப்பு கட்டுரை வெளி வந்துள்ளது கண்டு நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

ஒன்றுக்கும் உதவாத சினிமா நாயகர்களையும், நாயகிகளையும் அட்டைப் படத்தில் போட்டு காசு பண்ணும் பத்திரிகை உலகத்தில் “நாமக்கல்லின் நவீன நம்மாழ்வார்”  திரு.நாகராஜனை அட்டைப்படத்தில் முழுவதும் போட்டு பெருமைப்படுத்திய பசுமை விகடனுக்கு நன்றி.

வாழ்க விவசாயம்……………….. வளர்க விவசாயிகள்………………….

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

9 + ten =