ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில் அருள்மிகு வடபத்ரசயனர் (வடபெருங்கோவிலுடையான்) – க்கு ஜீர்ணோத்தாரண மஹாசம்ப்ரோக்ஷண அழைப்பிதழ்: –

ஸ்ரீ

Vastu - Andal Gopuram Kumbabishegamஎம்பெருமான் ஸ்ரீவடபத்ரசயனருக்கும், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி வராஹர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீபெரியாழ்வார், தமிழக அரசின் சின்னமான ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் நிகழும் மன்மத வருஷம் வைகாசி மாதம் 8ம் தேதி(22-05-2015) வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி, புனர்பூச நட்சத்திரம், சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்த்திர முறைப்படி மஹா சம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற  உள்ளது.

இவ்வைபவத்தில் ஸ்ரீமத் பரமஹம்ஸ வானமாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், ஸ்ரீஸ்ரீஸ்ரீ.த்ரிதண்டி ஸ்ரீமன்நாராயண சின்ன ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளி மங்களாசாஸனம் செய்கிறார்கள்.

நண்பவர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

sixteen + five =