பணக்காரர் ஏழையாக எளிய முறை:-

ஸ்ரீ

Stop-Cheatingசமீபத்தில் எனக்கு ஏற்பட்ட கீழ்க்கண்ட அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு காரணம் இருப்பதால் பகிர்ந்து கொள்கின்றேன்:

நான் ஒருவருக்கு எழுதிய இந்த கடிதத்தை படித்தால் கதை புரியும்.

என்றும் அன்புடன்

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு,

அம்மா நீங்கள் என்னை தொலைபேசியில் அழைத்த போதெல்லாம் தங்கள் அழைப்பை ஏற்று கொண்டு பதில் சொல்லாமல் தவிர்த்ததற்கு மன்னிக்கவும். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.

  1. தாங்கள் ஏற்கனவே பார்த்த வாஸ்து வல்லுனர்கள் தங்களை தவறாக வழி நடத்தியதாலோ அல்லது நீங்கள் அவர்கள் சொன்ன விஷயத்தை சரியாக செய்யாததாலோ ஏற்பட்ட வருத்தத்தால் தாங்கள் சற்று நிலை குலைந்த நிலையில் இருந்த போது நான் உங்களை சந்தித்ததாக கருதுகின்றேன். நான் உங்களை சந்தித்த போது என்னை தாங்கள் முழுவதுமாக நம்பாமல் செய்தால் நடக்குமா? நடந்து விடுமா? என்று கேள்வி கேட்டது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்தது. சந்தேகத்துடன் செய்யும் எதுவும் பயன் தராது என்கின்ற சான்றோர் கருத்தை நான் உண்மையானது என்று நம்புகிறவன் என்பதால் உங்களுக்கு நான் கொடுக்கும் வாஸ்து சம்பந்தமான அறிவுரைகள் கண்டிப்பாக பயன் தராது என்பதில் மாற்று கருத்து இல்லை.
  2. மேலும், எனக்கு உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் தங்களுக்காக சென்னையில் இருந்து காரில் தாராபுரம் வந்து தங்களுடைய இரண்டு நிறுவனத்தையும் பார்த்து விட்டு, பின் கோவையில் உங்களுடனும், உங்கள் மகளுடனும் உரையாடிவிட்டு அடுத்த நாள் திருப்பூரில் உள்ள உங்களுடைய அலுவலகம் மற்றும் வீட்டை ஆய்வு செய்து தங்களிடம் எல்லாவற்றையும் பொறுமையாக விளக்கி, தங்களுடைய எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பின் நான் ஊர் திரும்ப எத்தனித்த போது தாங்கள் இதுக்கு (நேற்றும், இன்றும் பார்த்த அத்தனை வேலைக்கும்)பணம் கொடுக்க வேண்டுமா? என்று கேள்வி கேட்ட போது நான் முற்றிலும் உடைந்து போனேன். அம்மா உங்களுக்காக 12 – 14 மணி நேரம் உழைத்ததற்கு நீங்கள் பரிசு கொடுத்திருக்க வேண்டாம். நபிகள் நாயகம் சொன்னது போல், உழைப்பவனின் வியர்வை காயும் முன்பே உழைப்பவன் செய்த வேலைக்கு கூலி கொடுத்திருக்க வேண்டுமல்லவா? இது எப்படி தங்களுக்கு தெரியாமல் போனது அம்மா?

நீங்கள் நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் விட்டு விடுங்கள். உங்கள் நிறுவனங்களை பார்த்து விட்டு உங்களை பார்க்க வருவதற்கு முன் என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திய  நண்பரிடம் நான் சொன்னது இது தான். சில இலட்சங்கள் கட்டணமாக வாங்கலாம் இவர்களிடம் நான் பார்த்த வேலைக்கு – இவர்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில். ஆனால் பாவம் கஷ்டப்படுகிறார்கள். இவர்கள் நான் செய்த வேலைக்கு பணம் கொடுத்தாலும் பணம் வாங்க மாட்டேன் என்று கூறி விட்டு தான் 21-02-2015 அன்று மதியம் தங்கள் வீட்டிற்கே வந்தேன். ஆனால் தாங்களோ என்னிடம் வேலையை வாங்கி விட்டு இதற்கு தனியாக பணம் தர வேண்டுமா? என்று கேட்ட கேள்வி தான் என்னால் தங்களுக்கு என் சேவையை தொடர்ந்து அளிக்க முடியாததற்கு இரண்டாவது மிகப்பெரிய காரணமாகி போனது.

தயவு செய்து அம்மா! தாங்கள் உங்கள் வசதிக்கேற்ப, உங்கள் மனநிலைக்கேற்ப ஒருவரை வைத்து உங்கள் வேலையை செய்து கொள்ளுங்கள். என்னை இனிமேல் தயவுகூர்ந்து இது சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டாம். தாங்கள் எனக்கு வருத்தத்தை கொடுத்து இருந்தாலும், என்னுடையை ஆண்டாள் பிரார்த்தனையில் எப்போதும் உங்களுக்கு ஒரு இடம் உண்டு. நீங்கள் உங்கள் பிரச்சினைகளில் இருந்து வெளிவர நான் எப்போதும் ஆண்டாளை வேண்டிக் கொள்வேன்.

கடைசியாக ஒரு அறிவுரை – எது எப்படி இருந்தாலும் தங்களுடைய மகனின் மகனை ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தத்து கொடுத்து, எடுத்து கொள்ளவும். இதை தயவுகூர்ந்து அலட்சியம் செய்து விட வேண்டாம்.

வாழ்க வாழ்வாங்கு

வாழ்க வளமுடன்

ஆண்டாள் பி.சொக்கலிங்கம்

பின் குறிப்பு: ராம்கோ தலைவரை திரு.பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா அவர்களுடனான சந்திப்பை முடித்து கிளம்பும் போது என்னிடம் அவர் கேட்ட கேள்வி….

உங்களுக்கு ஏதும் உதவி தேவையா!!!

இந்த ஒரே ஒரு கேள்வி தான் அவரை இன்றும், என்றும் தமிழகத்தின் மிகப்பெரிய பணக்காரராக வைத்திருக்கின்றது, வைத்திருக்கவும் போகின்றது.

இவருக்கு நேர்மாறாக மேல் சொன்ன கடிதத்தில் நான் குறிப்பிட்டவருக்கு பிரச்சினைகள் தினமும் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றது. 200 கோடி சொத்து உள்ள இவருக்கு 100 கோடி அளவிற்கு கடன் உள்ளது.

ஆக பணக்காரர்களின் கடனுக்கு இப்போது காரணம் புரிந்து இருக்குமே.

ரொம்ப எளிமையாக சொல்லணும்னா பணக்காரர்கள் ஆக முயற்சிப்பவர்களும், பணக்காரர்கள் ஆனவர்களும் செய்ய கூடாதது பிறரை ஏமாற்ற கூடாது.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

5 × two =