திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்:

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்: #கோயில் அமைவிடம்: மதுரை, மேலூர் வழித்தடத்தில் மதுரையிலிருந்து 10 km தொலைவில், இந்த அழகிய காளமேகப் பெருமாள் வீற்றிருக்கும் திருமோகூர் அமைந்துள்ளது.  மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்தும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் நிறைய பேருந்துகள் இங்கே செல்கின்றன. மதுரையிலிருந்து ஒத்தக்கடை சென்று, அங்கிருந்து ஆட்டோவிலும் இந்த கோயிலுக்கு செல்லலாம். மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 7 km தொலைவிலும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 15 km தொலைவிலும், #யானைமலை […]

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில்:

#திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. #கோயில் தகவல்கள்: மூலவர்: நின்ற நாராயணன் உற்சவர்: திருத்தண்காலப்பன் தாயார்: செங்கமலத்தாயார். அன்னநாயகி (ஸ்ரீதேவி) அனந்தநாயகி (நீளாதேவி) அம்ருதநாயகி (பூமாதேவி) தீர்த்தம்: பாபவிநாச தீர்த்தம், பாஸ்கர சங்க, பத்ம அர்ஜூன தீர்த்தங்கள் பிரத்யட்சம்:சல்ய பாண்டியன், ஸ்ரீ வல்லபன், சந்திர கேது (புலி) ஸ்ரீதேவி #மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் கட்டிடக்கலையும் பண்பாடும் விமானம்: தேவசந்ர […]

ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்:

ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்:   திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.  #ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது.  ராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர்.  #தலவரலாறு : புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும் ஆதிஜெகநாதப்பெருமாளாகவும் காட்சியளித்த திருத்தலம்.  இந்த ஜெகந்நாதர் தசரதருக்கு ராமபிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் […]

சௌமியநாராயணப் பெருமாள் கோயில்: 

சௌமியநாராயணப் பெருமாள் கோயில்:   தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி.  #கோயில் தகவல்கள்: சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி, மாசி தெப்பத் திருவிழா மற்றும் நவராத்திரி. கட்டடக்கலை :திராவிடக் கட்டிடக் கலை   #கருவறை : கருவறையில், #ஸ்ரீதேவி, #பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், #புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி […]

திருமாலிருஞ்சோலை:

திருமாலிருஞ்சோலை: அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. #தலவரலாறு : சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார்.  சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் […]

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்:

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்: திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பல்லவர்களின் மேலாண்மைக்கு உட்பட்டு முத்தரையர்களால் நிர்மாணிக்கப்பட்ட குடைவரைக்கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் […]

சாளக்கிராமம்:    

சாளக்கிராமம்:     1933ம் ஆண்டில் இந்து மதத்தையும், குறிப்பாக சிவலிங்க வழிபாட்டையும் குறைகூறி #ஆர்தர் மைல்ஸ் என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டார்.  பக்கத்திற்குப் பக்கம் இந்து மத பழக்க வழக்கங்களை  “#பகுத்தறிவுப் பகலவன்கள்” குறைகூறுவது போல எழுதினாலும் நிறைய விவரங்களைத் தருகிறார்.  அதில் ஒன்று சாளக்கிராமம் பற்றியது. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் #லண்டன் சுவாமிநாதன்:- சாளக்கிராமம் என்பது வெழுமூன இருக்கும் ஒரு கல். அதற்குள் விஷ்ணு சக்கரம் போல அச்சு இருக்கும். இது உண்மையில் உயிரியல் அறிஞர்கள் சோதனைக் […]

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில்

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில்: திருவெள்ளக்குளம் அல்லது அண்ணன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று. #பெயர் வரலாறு : திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று.  வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று.  #திருமங்கையாழ்வார் […]

லட்சுமி நாராயண சாளக்கிராமம்: 

லட்சுமி நாராயண சாளக்கிராமம்:  ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம்: நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது ரகுநாத சாளக்கிராமம்: இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது வாமன சாளக்கிராமம்: இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம்: வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது தாமோதர சாளக்கிராமம்: விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்: மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் […]

திருக்காவளம்பாடி

திருக்காவளம்பாடி: திருக்காவளம்பாடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருநகரியிலிருந்து நடைப்பயணமாகவும் வரலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இத்தலமும் ஒன்றாகும். கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனையழித்தான். இந்திரன்,வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு, இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by