திருப்பைஞ்ஞீலி

திருப்பைஞ்ஞீலி: திருச்சி அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் ஞீலிவனேஸ்வரர் கோயில் உள்ளது. ஞீலி என்பது ஒரு வகை #கல்வாழை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை. பசுமையான #ஞீலி வாழையை தல விருட்சமாக பெற்றதால் திருப்பபைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. இக்கோயிலில் இரு அம்மன் சன்னதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் #விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த […]

திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள்

திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள்: #பாபநாசம் ,சேரன்மகாதேவி , #கோடகநல்லூர் , #குன்னத்தூர் , #முறப்பநாடு , #ஸ்ரீவைகுண்டம் , #தென்திருப்பேரை , #ராஜபதி, #சேர்ந்தபூமங்கலம் . #திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘#கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார். #நவ திருப்பதி ஸ்ரீவைகுண்டம் – வைகுண்டநாதர் (சூரியன்) #நத்தம் – விஜயாசனப் பெருமாள் (சந்திரன்) #திருக்கோளூர் – வைத்தமாநிதிப் பெருமாள் […]

கஜா புயல் நிவாரண உதவி

அனைவருக்கும் வணக்கம், கஜா புயல் நிவாரண உதவிக்கு ஆண்டாள் வாஸ்து குழுவிடம் மக்கள் ஒப்படைத்த பொருட்களையும், ஆண்டாள் வாஸ்து நிபுணர்களின் பங்களிப்பையும் சேர்த்து கீழ்க்கண்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது. நிவாரண உதவி குழு தலைவர் பிரபல ஆண்டாள் வாஸ்து நிபுணர் கும்பகோணம் திரு.பாலா(8344785555) அவர்கள் தலைமையில் ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.சக்திவேல்(8883455559), திருத்துறைபூண்டி திரு.ராஜப்பா(9442514592), விழுப்புரம் திரு.ஜவகர்(9841940774), திருவாரூர் திரு.செல்வகுமார்(9600717169), பட்டுகோட்டை திரு.ராம் பிரணவ்(8825577416) மற்றும் சீர்காழி திருமதி.கீதா ராஜேந்திரன்(9087847303) ஆகியோர் கடும் பிரச்சினைகளுக்கு […]

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்:

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்: சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி. இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன். பூலோகத்தில் பிறந்த பார்வதி தேவி, சிவனை நோக்கித் தவத்தில் ஆழ்ந்தார். இளகிய மனம்கொண்ட ஈசன், தேவியின் தவத்திற்கு இரங்கி அம்பாளை ஏற்றுக்கொண்டார். பூலோகத்தில் அம்பாள் தவம்புரிந்த இடம் திருப்பாச்சூர். இங்கே ஈசன் அழைத்த திருநாமத்தினாலயே ‘தங்காதலி’ என்னும் பெயருடன் அம்மன் அருளாட்சி செய்து வருகிறார். இந்த அன்னையை […]

ஆதி மகா பைரவேஸ்வரர் கோவில்

ஆதி மகா பைரவேஸ்வரர் கோவில்: ஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான். இந்த பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகள் மட்டுமின்றி ஏனைய பிற இறை வடிவங்களையும் படைத்தவரும் அவரே. அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம், சிவபெருமான் தனது அம்சமாகவும், வலிமைமிக்க ஞானமூர்த்தியாகவும் பைரவரை உருவாக்கினார் என்றும், எட்டுதிசைகளிலும் அவரை குடிகொள்ளச் செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அளித்து, அதன் மூலம் அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்றும் பைரவர் தோற்றத்தைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன. ‘பைரவர்’ என்றால் ‘பயத்தைப் போக்குபவர்’, ‘பாபத்தையும் […]

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்- வரலாறு

#மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாறு: மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பற்றி மேலும் ஒரு வரலாறு கூறப்பட்டு வருகிறது. அது என்ன தெரியுமா? தட்சனின் மகள் தாட்சாயினி. பராசக்தியின் மற்றொரு அவதாரம்தான் தாட்சாயினி. அவளுக்கு திருமணம் முடிக்க பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தான் தட்சன். முடிவில் சிவன் அவளுக்கு மாப்பிள்ளையானார். தாட்சாயினி இதைக் கேட்டு மகிழ்ச்சி மலர் மஞ்சத்தில் ஊஞ்சலாடுவதைப் போல் உணர்ந்தாள். தட்சனோ இதில் இன்னுமொரு படி மேலே சென்று, தலைகால் […]

காயாரோகணேஸ்வரர் கோவில்:

காயாரோகணேஸ்வரர் கோவில்: அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் ‘#கடல்நாகை’ எனும் நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை ஈசனுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் ஈசனுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார். ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த […]

பசுபதேஸ்வரர் கோவில்: 

பசுபதேஸ்வரர் கோவில்: ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் எனபதால் காசி நகருக்கு ‘ஆனந்த வனம்’ என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. ‘அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்’ என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில் ‘மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது’ என காசியின் பெருமையை […]

நாகபூஷணி அம்மன் திருக்கோவில்:

நாகபூஷணி அம்மன் திருக்கோவில்: இலங்கை நாட்டின் பழம்பெரும் அம்மன் கோவில், 64 சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழும் ஆலயம், அம்மன் #சுயம்புவாக தோன்றிய திருத்தலம், தலபுராணச் சிற்பங்கள் நிறைந்த சித்திரத் தேர் கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டு விளங்குவது, நயினா தீவு நாகபூஷணி அம்மன் திருக்கோவில். முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வழிபாட்டுத் தலங்களில், #ஈழ நாட்டில் உள்ள ‘நயினா தீவு’ம் ஒன்றாகும். 64 சக்தி பீடங்களில் இது, புவனேஸ்வரி பீடமாக திகழ்கின்றது. காளிதாசரால் வணங்கப்பட்ட […]

துயர்தீர்த்தநாதர் கோயில்

துயர்தீர்த்தநாதர் கோயில்: ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்கோயிலில்லிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. இத்தளம் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் தட்சணாமூர்த்தியாக இருந்து இறைவிக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 31ஆவது தலமாகும். #இறைவர் திருப்பெயர் : பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர் #இறைவியார் திருப்பெயர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by