தலைநகரத்தின் பிரதானக் கடைத்தெருவில் இருக்கும் கடைகளில் பிச்சை எடுத்துத் தன் வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தான் பிச்சைக்காரன். கடைக்காரர்கள் சில சமயம் அவன் மேல் இரக்கப்பட்டு செப்புக்காசுகளைப் பிச்சை போடுவார்கள். அவர்களுடைய வியாபாரம் சரியில்லை என்றால் பிச்சைக்காரன் மேல் எரிந்து விழுவார்கள். சிலர் காசு போட்டாலும் வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். பிச்சைக்காரனுக்கு மிகவும் அவமானமாக இருக்கும். சில நாட்களில் முன்னிரவு வேளையில்தான் அவனுக்கு முதல் உணவு கிடைக்கும். அதை உண்ணும்போது தனக்குக் கிடைத்த வசவு வார்த்தைகளை நினைத்துப் பார்ப்பான். […]