உடனடியாக அமல்படுத்த ஆவன செய்க…
குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் எந்த வாகனமும் ஓட்ட முடியாது என்ற தடையையும் ஆயுள் தண்டனையையும் கிடைக்குமாறு சட்ட திருத்தத்தை கொண்டு வந்து அதை உடனடியாக அமல்படுத்த ஆவன செய்க…
இனி கணவன்,மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற நிலையை உருவாக்க ஆவன செய்க…
அமைச்சர், MP, MLA ஆகியோரின் சிகிச்சைக்காக அரசாங்க மருத்துவமனை இல்லாமல் தனியார் மருத்துவமனையை உபயோகிக்கும் பட்சத்தில் அவர்களுடைய பதவிகளை ரத்து செய்ய ஆவன செய்க…
அனைத்து அரசாங்க ஊழியர்களின் குழந்தைகளும் இனி அரசு பள்ளியில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற ஆவன செய்க…
காவல்துறையினர் நலமுடன் வாழ அவர்களுக்கும் மற்ற அரசு ஊழியர்கள் போல விடுமுறை சலுகைகளை அறிவிக்க ஆவன செய்க….
சாதி சண்டைகளை ஒழித்து என்றும் மகிழ்ச்சியாக மக்கள் வாழ்ந்திட கலப்புத் திருமண நிதி உதவி சட்டத்தை ரத்து செய்ய ஆவன செய்க….
சாதிய வேறுபாடுகளை ஒழிக்க கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய ஆவன செய்க….
இனி அரசு வேலை வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அரசாங்கப் பள்ளியில் மட்டுமே படித்திருக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற ஆவன செய்க…