திருத்தணி முருகன் கோவில்:

      திருத்தணி முருகன் கோவில்: முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் ஐந்தாவது படைவீடான திருத்தணிகை, சென்னையில் இருந்து சுமார் 84 கி.மீ. தூரத்தில் உள்ளது.சென்னையில் இருந்து திருப்பதி மற்றும் மும்பை செல்லும் இருப்புப் பாதை தடத்தில் வரும் ஜங்ஷன் அரக்கோணம். இங்கிருந்து வடக்கே சுமார் 13 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருத்தணி. கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணியை சேர்ப்பது என்ற கருத்து மேலும் வலுப்பெற்று, கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு […]

 அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில்

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள விராதனூர் எனும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில். இது பழமை வாய்ந்த கோவில்களுள் ஒன்றாகும். மூலவர் – அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் பழமை – 500-1000 வருடங்களுக்கு முன் ஊர் – விராதனூர் மாவட்டம் – மதுரை மாநிலம் – தமிழ்நாடு தல வரலாறு : சுமார் 750 வருடங்களுக்கு முன்பு உத்திரகோசமங்கை என்ற ஊரிலிருந்து இரண்டு குடும்பத்தினர் தங்கள் குலதெய்வமான அழகர்கோவில் பெருமாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்த புறப்பட்டு வந்தனர்.வழியில் […]

இலங்குடி சிவன் கோவில்:

இலங்குடி சிவன் கோவில்: ரத்தம் போல் வழியும் திரவம்…. அதிசய நந்தி ! பொதுவாக எல்லா சிவன் கோவிலிலும் நந்தி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் சிவகங்கை #இலங்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோவில் சற்றே வித்தியாசமான சிறப்பு வாய்ந்த ஒரு அதிசய நந்தி சிலை உள்ளது. ஆம், அப்படி என்ன சிறப்பு என்றால், பல நூறு ஆண்டுகளாக இந்த நந்தியின் வாயில் இருந்து வித்தியாசமான ரத்தம் போன்ற திரவம் வழிந்தபடியே உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது ‘இலங்குடி” […]

சாத்தாயி அம்மன் கோவில்:

                                              சாத்தாயி அம்மன் கோவில்: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் உள்ளது நங்கவரம். திருச்சியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைதியான சூழலில் உள்ள கிராமம் இது. இங்கு சாத்தாயி அம்மன் ஆலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. ஊரின் செல்ல மகளாய் ஊரைக் காத்து வரும் காவல் தெய்வமாய் இருந்து வருகிறாள் […]

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்

      கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்: கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன்  கோவிலாகும். சங்ககாலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும் அறமலை என்றும் அழைக்கப் பட்டது. அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார்.திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தங்களது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர். கோவில் வரலாறு : இயற்கை வளம்மிக்க கொல்லிமலை வல்வில்ஓரி என்னும் மன்னன் ஆண்ட பகுதியாகும். காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் […]

ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர்:

    ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர்: ஆஸ்திரேலியாவில் ஓர் அதிசய சிவன் கோவில் – குகையினுள் அதிசய பெட்டகம்! சுற்றிலும் மலை அரணாக விளங்க பச்சைபசேலென அமைதியான சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரரை, தரையிலிருந்து சுமார் பதினைந்து அடி இறங்கிச் சென்றால் தரிசனம் செய்யலாம். ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் சிவன் கோவில் ஆஸ்திரேலியாவில் ரம்மியமாக அமைந்துள்ளது. இந்த சிவன் கோவில் சிட்னி நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் மின்டோ என்னும் இடத்தில் உள்ளது. பூமிக்கு அடியில் 1450 சதுர அடி பரப்பில் குகை வடிவில் அமைக்கப்பட்ட கோவில் இது. 1997ல் இக்கோவில் கட்டும் பணி ஆரம்பித்து 1999ல் […]

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்

  இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்: இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் தேவாரப் பாடல்கள் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. தல வரலாறு : இராமாயணப் போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்து வருகிறார். இராமேஸ்வரம் தலம் வந்தபிறகு இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் […]

பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் :

    பவானி காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர் வேதநாயகி சன்னிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சன்னிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக அமைந்துள்ளது. தல வரலாறு : ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் […]

திருவதிகை வீரட்டானேசுவரர் 

              திருவதிகை வீரட்டானேசுவரர் : திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும்.இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. தல வரலாறு : சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் . திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். வித்யுந்மாலி, […]

சமயபுரம் மாரியம்மன் கோவில்

தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இது திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வரலாறு : சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்தகோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது. இங்கு தான் அம்மன் கோவில் உருவாகியதாக நம்பப்படுகிறது. அம்மனின் வரலாறு : வைணவி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by