பாடல் 11: கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் […]