திருப்பாவை பாடல் 12:

திருப்பாவை பாடல் 12: (எழுக எனல்) கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.  விளக்கம் : இளம் கன்றுகளின் கனைத்தலை கேட்டதும், அவற்றின் கனைத்தலின் பொருள் உணர்ந்து அதாவது, அவற்றின் பசியை எண்ணிய எருமைகள் தங்கள் […]

திருப்பாவை பாடல் 11:

திருப்பாவை பாடல் 11: (விழித்து எழுக) கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். விளக்கம் : கன்றுகளை ஈன்று மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய போர் செய்யும் இடையவர்களின் குலத்தில் தோன்றிய […]

திருப்பாவை  பாடல் 10:

திருப்பாவை பாடல் 10: (கதவை திறக்க) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். விளக்கம் : சென்ற பிறவியில் நாராயணனை எண்ணி விரதம் இருந்து அதன் பயனாக இப்பிறவியில் சொர்க்கத்தில் இருப்பது போன்று சுகம் பெற்றுக் கொண்டிருக்கும் அம்மையே! மாற்றம் […]

திருப்பாவை பாடல் 9:

#திருப்பாவை #பாடல் 9: (நாமம் நவில்வோம் எனல்) தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும் மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். விளக்கம் : எழிலும், தூய்மையும் கொண்ட மணிகளால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிலும் விளக்குகள் பிரகாசமாக ஒளிவிட, நறுமணம் நிறைந்த சந்தனம் அகில் […]

திருப்பாவை : பாடல் – 08

திருப்பாவை : பாடல் – 08 (இறையருள்) கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். பொருள் : கருமையான கிழக்கு வானமானது வெளுத்து விட்டது. எதிலும் நிதானமாகவும், மந்தமாகவும் நடக்கும் எருமைகள் கூட எழுந்து புல் […]

திருப்பாவை பாடல் 07…

திருப்பாவை பாடல் 07… கதவை திறக்க…!! கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய். பொருள் : கீச்… கீச் என்று தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வலியான் கருங்குருவிகளின் பேசும் ஒலி உமக்கு கேட்கவில்லையா? ஆயர்பாடியில் வாழும் ஆய்ச்சிகள் கண்ணன் […]

திருப்பாவை பாடல் 06:

திருப்பாவை பாடல் 06: (பல்வகை ஒலிகள்) புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மௌ;ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பொருள் : வானம் வெளுத்து ஆதவன் தோன்றி பறவைகள் எல்லாம் எழுந்து மாறி மாறி ஒலிக்கத் துவங்கிவிட்டன. கருடனுக்கு அரசனான பெருமாளின் திருக்கோவிலில் […]

திருப்பாவை பாடல் 05:

திருப்பாவை பாடல் 05 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் பொருள் : மாயக்கலையில் வல்லவனாகவும், நிலைப்பெற்ற வடமதுரையில் பிறந்த மகனை யமுனை துறையில் ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி […]

திருப்பாவை பாடல் 04:

திருப்பாவை பாடல் 04: ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள் : மேகத்திற்கு அதிபதியாக இருக்கின்ற பர்ஜன்ய தேவனே, கடலில் இருந்து உற்பத்தியாகும் எங்கள் மழையாகிய தெய்வமே, நீ சிறிதும் எங்கள் விருப்பங்களை மறுக்காது நிறைவேற்றுவாயாக… […]

திருப்பாவை பாடல் 03:

திருப்பாவை பாடல் 03: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். பொருள் : சிறுவனாக சென்று மகாபலி மன்னனிடம் மூன்றடி மண்ணை பெற்று பின்பு விஸ்வரூபமெடுத்து மூன்று உலகங்களையும் தன்னுடைய திருப்பாதங்களால் அளந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by