திருப்பாவை பாடல் 9:

#திருப்பாவை #பாடல் 9: (நாமம் நவில்வோம் எனல்) தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும் மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். விளக்கம் : எழிலும், தூய்மையும் கொண்ட மணிகளால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிலும் விளக்குகள் பிரகாசமாக ஒளிவிட, நறுமணம் நிறைந்த சந்தனம் அகில் […]

திருப்பாவை : பாடல் – 08

திருப்பாவை : பாடல் – 08 (இறையருள்) கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். பொருள் : கருமையான கிழக்கு வானமானது வெளுத்து விட்டது. எதிலும் நிதானமாகவும், மந்தமாகவும் நடக்கும் எருமைகள் கூட எழுந்து புல் […]

திருப்பாவை பாடல் 07…

திருப்பாவை பாடல் 07… கதவை திறக்க…!! கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய். பொருள் : கீச்… கீச் என்று தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வலியான் கருங்குருவிகளின் பேசும் ஒலி உமக்கு கேட்கவில்லையா? ஆயர்பாடியில் வாழும் ஆய்ச்சிகள் கண்ணன் […]

திருப்பாவை பாடல் 06:

திருப்பாவை பாடல் 06: (பல்வகை ஒலிகள்) புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மௌ;ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பொருள் : வானம் வெளுத்து ஆதவன் தோன்றி பறவைகள் எல்லாம் எழுந்து மாறி மாறி ஒலிக்கத் துவங்கிவிட்டன. கருடனுக்கு அரசனான பெருமாளின் திருக்கோவிலில் […]

திருப்பாவை பாடல் 05:

திருப்பாவை பாடல் 05 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் பொருள் : மாயக்கலையில் வல்லவனாகவும், நிலைப்பெற்ற வடமதுரையில் பிறந்த மகனை யமுனை துறையில் ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி […]

திருப்பாவை பாடல் 04:

திருப்பாவை பாடல் 04: ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள் : மேகத்திற்கு அதிபதியாக இருக்கின்ற பர்ஜன்ய தேவனே, கடலில் இருந்து உற்பத்தியாகும் எங்கள் மழையாகிய தெய்வமே, நீ சிறிதும் எங்கள் விருப்பங்களை மறுக்காது நிறைவேற்றுவாயாக… […]

திருப்பாவை பாடல் 03:

திருப்பாவை பாடல் 03: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். பொருள் : சிறுவனாக சென்று மகாபலி மன்னனிடம் மூன்றடி மண்ணை பெற்று பின்பு விஸ்வரூபமெடுத்து மூன்று உலகங்களையும் தன்னுடைய திருப்பாதங்களால் அளந்த […]

திருப்பாவை பாடல் 02:

திருப்பாவை பாடல் 02: வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள் : பாவை நோன்பு மேற்கொள்பவர்களுக்கு ஆண்டாள் இப்பாடலில் சில கோட்பாடுகளை கூறுகின்றாள். நோன்பு மேற்கொள்ளும் பொழுது நாம் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள் பற்றியும், […]

திருப்பாவை பாடல் 01:

#திருப்பாவை பாடல் : மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் #பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் […]

திருப்பாவை பாடல் 29:

திருப்பாவை பாடல் 29: சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். பொருள்: கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by