திருச்செம்பொன் செய்கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரின் நடுவில் அமைந்துள்ளது. இராவணனை அழித்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணர்க்குத் தானம் செய்தார். அந்தப் பொன்னைக் கொண்டு இந்தக் கோவிலை கட்டியபடியால் இதற்கு செம்பொன் செய்கோவில் என்று பெயர் வந்ததாக இக்கோயிலின் தலவரலாறு […]