#ஆயர்பாடி

ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் #கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலம் இதுவாகும். இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது. மாநிலம்:உத்திரப் பிரதேசம் மாவட்டம்:மதுரா #தல வரலாறு : இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. […]

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்: திருத்தலங் களில் 63–வது தலமாக புகழ்பெற்று விளங்குகிறது. 14–ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலை கட்டி முடித்துள்ளான். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கடந்து போய்விட்டது. பல்லவ #மன்னர்கள் தங்களது ஆட்சி காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக அமைந்துள்ள கடற்கரை கோவிலை கட்டினார்கள். இந்தக் கடற்கரை கோவிலில் அப்போது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, பூஜை வழிபாடுகள் நடந்து வந்தன. மாமல்லபுரம் பகுதியில் இயற்கை […]

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து #வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள #திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் #மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் #வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது. #வேங்கடகிருஷ்ண பார்த்தசாரதி கோயில் […]

திருப்பதி

திருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் […]

சோளிங்கர்

சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் ( திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் . #அமைவிடம் : தமிழ்நாடு மாநிலம், வேலூர் மாவட்டம், சோளிங்கபுரத்திற்கு கிழக்கே அமைந்த சிறு குன்றுகளில் சற்று உயரமான அடுத்தடுத்துள்ள குன்றுகளில் உச்சியில் அமைந்துள்ளது. #ஆஞ்சநேயர் கோவில்: இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய மலையில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் உள்ளது. […]

அகோபிலம்

அகோபிலம்: அகோபிலம் என்ற திவ்ய தேசம் ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  “அஹோ’ என்றால் “சிங்கம்’. “பிலம்’ என்றால் “குகை’. இது 108 திவ்யதேசத்தில் 97 வது திவ்யதேசமாகும். திருமங்கை ஆள்வார் அவர்களால் மங்களாசாசனம் (பாடல்) பாடப்பெற்றது. #கோயில் தகவல்கள்: மூலவர்:பிரகலாதவத வரதர் தாயார்:அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி தீர்த்தம்:அடிவாரம் – இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜதீர்த்தம், பார்கவ தீர்த்தம்; மலைக்கோயில் – பாவநாசினி மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் #போக்குவரத்து: இந்த கோயிலுக்கு […]

அயோத்தி

அயோத்தி (ஆங்கிலம்:Ayodhya), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பைசாபாத மாவட்டத்தில் இருக்கும் ஒரு அயோத்தி மாநகராட்சி ஆகும். #ராமர் பிறந்த இடம் ராம ஜென்மபூமி அயோத்தியில் அமைந்துள்ளது. இந்நகரம் சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சமசுகிருதம் – பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது. மாநிலம்: உத்தரப் பிரதேசம் மாவட்டம்: பைசாபாத் மாவட்டம் அயோத்தி நகரம், பண்டைய கோசல நாட்டின் தலைநகரம் ஆகும். #வரலாறு : சர்ச்சைக்குரிய பாபர் மசூதியும், ராமர் கோவிலும் அமைந்துள்ளது. இந்தியாவின் […]

திருவண்புருடோத்தமம்

திருவண்புருடோத்தமம்: திருவண்புருடோத்தமம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் #சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது. பெயர் விளக்கம் : இவ்விறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறார். எனவே இத்தலம் வண்புருடோத்தமம் ஆயிற்று. சிறப்பு : திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில். மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் தை அமாவாசைக்கு […]

முக்திநாத்

முக்திநாத் முக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும். கோயில் தகவல்கள்: நாடு:நேபாளம் மாவட்டம்:மஸ்டாங் மாவட்டம் அமைவு:தவளகிரி மண்டலம் உற்சவர்:ஸ்ரீமூர்த்தி கட்டடக்கலை வடிவமைப்பு: பௌத்த கட்டிடக் கலை வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by