கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்: கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். சங்ககாலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும் அறமலை என்றும் அழைக்கப் பட்டது. அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார்.திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தங்களது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர். கோவில் வரலாறு : இயற்கை வளம்மிக்க கொல்லிமலை வல்வில்ஓரி என்னும் மன்னன் ஆண்ட பகுதியாகும். காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் […]