ஒரு வீட்டின் தென்கிழக்கு மூலையின் மேற்கூரை கூம்பு போன்ற வடிவில் அமைக்கலாமா?
ஒரு வீட்டின் தென்கிழக்கு மூலையின் மேற்கூரை கூம்பு போன்ற வடிவில் கண்டிப்பாக அமைக்க கூடாது. மேலும், ஒரு கட்டிடத்தின் மேற்கூரை சமமாக தான் இருக்க வேண்டும். படத்தில் உள்ள இடம்: பை.பள்ளிப்பட்டி, தர்மபுரி
ஒரு வீட்டின் தென்கிழக்கு (Southeast) மூலையில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அந்த வீட்டின் தாய் சுவற்றிலிருந்து தூண் வைத்து கூரை (Cooling Sheet with Pillar) அமைக்கலாமா?
ஒரு வீட்டின் தென்கிழக்கு (Southeast) மூலையில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அந்த வீட்டின் தாய் சுவற்றிலிருந்து தூண் வைத்து கூரை (Cooling Sheet with Pillar) அமைக்க கூடாது. படத்தில் உள்ள இடம்: பெரம்பூர், சென்னை
உன்னைப் போல் தான் அவனுக்கும்…
ஒரு சமயம் பிரம்மதேவர் நாரதரிடம், “”நாரதா! உலகில் நீ பார்த்தவற்றுள் எந்த விஷயத்தை எண்ணி மிகுந்த ஆச்சரியம் கொண்டாய்?” என்று கேட்டார். “” தந்தையே! நான் கண்டு ஆச்சரியப்பட்டதென்றால், இறந்து கொண்டிருப்பவர்கள் இறந்து போனவர்களைப் பார்த்து அழுதுவது தான்!” என்றார் நாரதர். அடுத்து, “” நீ எண்ணி வியந்த வேறொரு விஷயம் இருந்தால் அதையும் சொல்லேன்!” என்றார் பிரம்மா. “”மனிதமனம் படுத்தும் பாடு இருக்கிறதே” என்று அதை எண்ணி வியந்திருக்கிறேன். உலகில் உள்ள எல்லோருக்கும் பாவ, புண்ணியம் […]
ஒரு இடத்தின் வடமேற்கு(North West Corner) மூலையில் அமைக்கப்படும் படிக்கட்டு அந்த இடத்தின் வடகிழக்கு (North East) பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாமா?
ஒரு இடத்தின் வடமேற்கு(North West Corner) மூலையில் அமைக்கப்படும் படிக்கட்டு அந்த இடத்தின் வடகிழக்கு (North East) பகுதியில் இருந்து கண்டிப்பாக ஆரம்பிக்க கூடாது. படத்தில் உள்ள இடம்: சிகரலஹள்ளி, தர்மபுரி
ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடம் அந்த இடத்தின் எல்லை வரை கட்டலாமா?
ஒரு இடத்தில் கட்டிடம் கட்டும் போது அந்த இடத்தின் எல்லை வரை கட்டிடம் கட்டக்கூடாது. அதாவது அந்த இடத்தின் நான்கு புறமும் மதில் சுவர் அமைத்து, மதில் சுவரின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை ஒட்டியவாறு கட்டிடம் கட்ட வேண்டும். ஒரு இடத்தின் மதில் சுவருக்கும், கட்டிடத்தின் தாய் சுவருக்கும் உள்ள இடைவெளியானது மேற்கு பகுதியை விட கிழக்கு பகுதியில் அதிகமாகவும், தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியில் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
பிப்ரவரி 28
ஸ்ரீ வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ¾ என் நினைவு தெரிந்து என்னுடைய பிறந்த தினத்தை எப்போதுமே என் அப்பா அவர் உயிரோடு இருந்தவரை சிறப்பாக கொண்டாடியதை பார்த்து இருக்கின்றேன். ¾ சற்று வயதில் வளர்ந்த பின் நானும் தனியாக நண்பர்களுடன் என்னுடைய பிறந்த தினத்தை கொண்டாடி இருக்கின்றேன். ¾ திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினருடனும் என்னுடைய பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடி இருக்கின்றேன். மொத்தத்தில் குடியோடு பாதி பிறந்தநாட்களையும், குடும்பத்துடன் மீதம் பிறந்தநாட்களையும் கொண்டாடிய நான், ஏதோ […]
ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றிற்கு சுற்று சுவர் அமைக்கலாமா?
ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றிற்கு சுற்று சுவர் கண்டிப்பாக அமைக்க கூடாது. ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்படும் கிணற்றிற்கு சுற்று சுவர் அமைக்க கூடாது என்கின்ற பட்சத்தில் பாதுகாப்பிற்காக இரும்பு கம்பி கொண்டு கிணற்றை மூடி கொள்ளலாம்.
வெற்றிக்கு காரணம் மனசு!
ஒரு இளைஞனுக்கு மகானாக வேண்டுமென்ற ஆசை எழுந்தது. என்ன செய்தால் மகான் ஆகலாம் என யோசித்தான். ஒரு மகானிடமே கேட்டுவிட்டால், தன் கேள்விக்கு பதில் கிடைத்து விடுமென ஒரு சிறந்த மகானை நாடிப் போனான். காவியும், பட்டையுமாய் அமர்ந்திருந்த அவரிடம்,””சுவாமி! உங்களை மகான் என்று ஊரே புகழ்கிறது. உங்களது இந்த நிலைக்கு காரணம் என்ன?” என்று கேட்டான். “”உண்ணுகிறேன், உறங்குகிறேன், தியானம் செய்கிறேன்,” என்றார் அவர். இளைஞன் சிரித்து விட்டான். “”ஏன் சாமி! இதைத்தான் ஊரில் எல்லாரும் […]
ஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் அமைக்கப்படும் கழிவறையின் மேல்தளத்தில் சாமான்கள் வைப்பதற்காக பரண் அமைக்கலாமா?
ஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் அமைக்கப்படும் கழிவறையின் மேல்தளத்தில் சாமான்கள் வைப்பதற்காக பரண் கண்டிப்பாக அமைக்க கூடாது. பெரும்பான்மையான வீடுகளில் படத்தில் உள்ளபடி தான் சாமான்கள் வைப்பதற்காக பரண் அமைத்து இருப்பார்கள். இப்படி பரண் அமைப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. மேலும் இது போன்ற அமைப்பு உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அங்கு உள்ள சாமான்களை எடுத்து விட்டு அந்த இடத்தை காலியாக வைத்து இருந்தாலே வாஸ்து உண்மையா? பொய்யா? என்பதை உணர்ந்து கொள்ள முடியும். படத்தில் உள்ள […]
ஒரு வீட்டின் தென்மேற்கு அறையின் தெற்கு சுவற்றில் அதன் மேற்கு சுவரை ஒட்டி ஜன்னல் (2) அமைக்கலாமா?
ஒரு வீட்டின் தென்மேற்கு அறையின் தெற்கு சுவற்றில் அதன் மேற்கு சுவரை ஒட்டி ஜன்னல் (2) அமைக்க கூடாது.