July 29 2017 0Comment

Andal Vastu – III Practitioner Training Programme

என்னை பொறுத்தவரை நான் வாஸ்து பார்த்ததில் என் சொல்படி நடந்தவர்கள் 90% பேர் நன்றாக இருக்கின்றார்கள். என்னை முழுவதும் நம்பாதவர்கள் அவர்கள் இஷ்டப்பட்ட படி கஷ்டப்படுகின்றார்கள்.

அந்த வகையில் என் வாஸ்து பார்முலா சரியானது என்பதை 100% நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த நம்பிக்கைக்கு பின் என்னுடைய  20 வருடம்  உழைப்பு  இருக்கின்றது. விலை மதிப்பில்லா இந்த உழைப்பை நான் இன்று கற்று தர முன் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் நான் இன்று நன்றாக இருக்கின்றேன். அதே போல் என்னை நம்பினவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற ஒரே விஷயம் தான்.

என்னை பொறுத்த வரை இந்த பயிற்சியை ஒரே நாளில் கூட கொடுக்கலாம். அப்படி பயிற்சி பெற்றவர்கள் ஒரு கால கட்டத்தில் பத்தோடு ஒன்றாக போய் விடுவார்கள்.

ஆனால் நான் விரும்புவது ஆண்டாள் வாஸ்து பயிற்சி பெற்றவர்கள்: -

  • பயிற்சிக்கு பின் கோடீஸ்வரராக உருவாகி பத்தில் முதலாவதாக வர வேண்டும்
  • வாஸ்து என்றாலே அது ஆண்டாள் வாஸ்து என்றாகி விடவேண்டும். இவ்வுலகின் வாஸ்து தேவைகள் அனைத்தையும் நம் ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் தான் பார்க்க வேண்டும்.

நான் கனவு கண்டது அனைத்தும் நனவாகி இருக்கின்றது இன்று வரை.

அது என்றும் தொடரும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கின்றேன். வாருங்கள் வாழத் துவங்குவோம்; மனிதத்தை கண்டுபிடிப்போம் என்கின்ற என் முயற்சியின் முதல் அத்தியாயம் ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்புகள்

I) இந்த பயிற்சி யாருக்கு தேவை: –

  1. வாஸ்து அறிவு பெற்று வாஸ்துவை தொழிலாக செய்ய நினைப்பவர்களுக்கும், சேவையாக செய்ய நினைப்பவர்களும், பகுதி நேர தொழிலாக செய்ய இருப்பவர்களுக்கும் இந்த பயிற்சி பெரிய அளவில் பயன்பெறும்.
  2. எனக்கு துணைவர் இல்லை, வேலை இல்லை, உறவுகளின் ஆதரவு இல்லை, பண கஷ்டத்தில் இருக்கின்றேன் என்று வாழ்பவர்களுக்கும்,  தைரிய மனம் படைத்தவர்களுக்கும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பயிற்சி இருக்கும்.

II) ஆண்டாள் வாஸ்து – 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

  1. வாஸ்து பயிற்சி வகுப்பு – III (Vastu Practitioner Training – III) – க்கிற்கு வருபவர்களுக்கு முதல் Condition: – என்னுடன் இருக்கும் 8 – 9 நாட்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். தேவைப்பட்டால் 20 மணி நேரமாக கூட இருக்கலாம்.
  2. Punctuality இன்றியமையாதது என்கின்ற உணர்வு மேலோங்கி இருக்க வேண்டும்.
  3. எனக்கு Numerology, Astrology, Pronology, Palmistry  எல்லாம் தெரியும். வாஸ்துவும் தெரிஞ்சிகிட்டா நானே எல்லா விஷயத்தையும் என்னை நாடி வரும் மக்களுக்கு கொடுக்க முடியும் என்கின்ற கண்ணோட்டத்தில் இந்த வகுப்பிற்கு கற்று கொள்ள வருகிறீர்கள் என்றால் அப்படிப்பட்ட அன்பு உள்ளங்களுக்கு என் வேண்டுகோள்:
  • தயவு செய்து அப்படி பட்ட எண்ணம் வைத்து கொண்டு        இந்தப் பயிற்சிக்கு வர வேண்டாம்.” என்பது தான்.
  • காரணம் நான் என்ன தான் பயிற்சி கொடுக்கிற அளவிற்கு வளர்ந்திருந்தாலும். நானே வாஸ்து என்கின்ற விஷயத்தை இன்றளவும் கற்றுக் கொள்ள முடியும் என்றுதான் நித்தமும் அணுகுகின்றேன். நீங்களும் அப்படி தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன். அப்படி இருந்தால் தான் கடல் போன்ற இந்த அறிவியலை புரிந்து கொள்ள முடியும். நாம் எல்லாவற்றையும் தெரிந்த அரைகுறையாக இருப்பதைவிட ஒன்றை மட்டும் நன்கு தெரிந்து கொள்ள முற்படுவோம். எப்படி டாக்டர்கள் Ortho, Neuro, Skin – க்கு என்று தனி தனியாக இருகின்றார்கலோ அதுபோல் எதாவது ஒரு கலையில் தனித்துவம் பெறுவோம்.
  1. இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி நான் யாரையும் வற்புறுத்தவில்லை. நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புகிறவர்கள் தயவு செய்து நன்றாக, சுயமாக முடிவெடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
  2. நான் யாரையும் ஆசை வார்த்தை சொல்லியோ, விளம்பரபடுத்தியோ கூட்டம் சேர்க்கவில்லை. இந்நிகழ்ச்சியால் நமக்கும் பயன் உண்டு என்று நம்புகிறவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றால் போதுமானது.
  3. தன் மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  4. கடவுளும் இவர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்கின்ற அளவிற்கு நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும்.
  5. சொல்வதை புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் அதுவே போதுமானது.
  6. மனிதாபிமானம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
  7. கடினமாக உழைக்கின்ற மனப்பான்மை 100% இருக்க வேண்டும்.
  8. இலவசமாக கருத்து கேட்பவர்களை அறவே ஒதுக்கி வைக்க தெரிந்திருக்க வேண்டும்; காரணம் அவர்கள் தான் மிகவும் அபாயகரமானவர்கள். இலவசமாக வாஸ்து அறிவுரை கேட்கிறவர்கள் பெரிய அளவில் எதிர்மறை எண்ணங்களை  (Negative Energy) உங்களுக்கு கொடுக்கவல்லவர்கள். காரணம் ஒரு வீடு கட்டும் அளவிற்கு வசதி உள்ளவர்களான இவர்கள் ஒரே ஒரு சந்தேகம் என்று கேட்பார்கள். அந்த சந்தேகத்திற்கு நீங்கள் பதில் சொல்லும் பட்சத்தில் வீட்டில் வேறு தவறு இருந்து அவர்கள் கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் தேவை இல்லாமல் உங்களுக்கு தான் கெட்டப்பெயர் ஏற்படும். மேலும் ஒரு வீடு கட்டும் அளவிற்கு வசதி உள்ளவர்களுக்கு ஒரு கேள்வியோ அல்லது 1௦ கேள்வியோ நீங்கள் அவர்களுக்கு இலவசமாக பதில் சொல்லும் பட்சத்தில் நம் நேரத்தை அவர்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கின்றோம். இது தவறு. இது நம்மை முடமாக்கும் செயல். பயிற்சி பெறுபவர்கள் இந்த கருத்தை நன்கு ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.நீங்களும் யாரிடமும் இலவசம் பெற கூடாது. அதேபோல் அடுத்தவர்கள் கொடுக்கும் இலவசமும் நமக்கு தேவை இல்லை என்பதில் தெளிவாக இருங்கள்.
  9. பயிற்சி முடிந்த உடன் ஒரே நாளில் போட்ட பணத்தை எடுக்க ஆசைப்படாதவர்களாக இருக்க வேண்டும்.
  10. இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற பிறகு உங்களை நீங்கள் சந்தைபடுத்த தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கலையை கற்று பிரயோஜனம் கிடையாது.

கீழ் கூறப்பட்டிருகும் நீதிக்கதையை பயிற்சிக்கு வரும் அனைவருக்கும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.

ஒரு தீவில் தனது நிறுவனங்களை துவங்க இரு செருப்பு தயாரிக்கும் கம்பனிகள் முயன்றன அங்கு நிறுவனங்களை நிறுவினால் வியாபாரம் எப்படி இருக்கும் என்று கண்டு உணர தங்களுடைய விற்பனையாளர்களை அங்கு அனுப்பின…  முதல் நிறுவனத்தின் விற்பனையாளர் அங்கு ஆய்வு செய்து விட்டு அங்கு இலட்சம் பேர் உள்ளனர் ஆனால் ஒருவருக்கு கூட செருப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை. அங்கு செருப்பு நிறுவனம் தொடங்குவதால் எந்தவித லாபமும் இல்லை என்று அறிக்கை சமர்பித்தார். இரண்டாவது நிறுவனத்தின் விற்பனையாளர் அங்கு ஆய்வு செய்து விட்டு அங்கு இலட்சம் பேர் உள்ளனர் ஆனால் ஒருவருக்கு கூட செருப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை.எனவே நாம் செருப்பின் பயனை அவர்களுக்கு விளக்கி விளம்பரம் செய்தால் நாம் மிக பெரிய அளவில் வெற்றி பெறலாம் என்று அறிக்கை சமர்பித்தார். இரண்டாவது நிறுவனம் தனது நிறுவனத்தை துவங்கி வெற்றியும் பெற்றது.

மேற்சொன்ன கதைபோல வாஸ்துவிற்கும் உலகம் முழுவதும் தேவை இருக்கின்றது. எனவே பார்க்கின்ற ஒவ்வொரு வீட்டையும் நமக்கு ஒரு விஷயத்தை கற்று கொடுக்கும் ஆசானாகவும்,வாடிக்கையாளர்களாகவும் பார்க்கும் மனோ பக்குவம் வேண்டும்.

III) Andal Vastu – III Practitioner Training Programme - க்கு பிறகு

  1. ஆரம்ப கால கட்டங்களில் கூடுமானவரை பெரிய பணக்காரர்களுக்கு வாஸ்து பார்ப்பதை தவிர்க்கவும். காரணம் என் அனுபவத்தின் படி நீங்கள் அதிகம் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதற்கு பதில் ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் வாஸ்து பார்க்கும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து உங்களுக்கு பெரிய நட்பும் / அன்பும் / அரவணைப்பும் / ஊக்கமும் கிடைக்கும்.
  2. பணக்காரர்கள் உங்களை யாருக்கும் அறிமுகம் செய்ய மாட்டார்கள். ஆனால் ஏழைகளும், நடுத்தர மக்களும் உங்களை கண்டிப்பாக அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்வார்கள்.
  3. உங்களுக்கு வாஸ்து தெரியும் என்று நீங்களே உங்களை பற்றி சொல்லி கொண்டு திரிய கூடாது.
  4. உங்களுக்கு வாஸ்து தெரியும் என்பதை உங்களை சுற்றி உள்ளவர்கள் ஏற்று கொள்ளும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
  5. தேவையில்லாத ஆட்களிடம் வாஸ்துவை பற்றி வாதம் செய்ய கூடாது.
  6. ஒரு குறிப்பிட்ட காலம் வரை பணம் இல்லாமல் தேவையான நல்ல ஆட்களுக்கு வாஸ்து பாருங்கள். பின், பணம் இல்லாமல் யாருக்கும் பார்க்காதீர்கள். காரணம் இலவசம் மக்களால் கொண்டாடப்படுவதில்லை. இலவசத்திற்கு என்றும் மதிப்பும் இருப்பதில்லை.
  7. என்னைப் பொறுத்தவரை நான் ஏறத்தாழ 1௦ வருடங்களுக்கு வாஸ்துவை சேவையாக பண்ணியதால் தான் இந்தளவிற்கு நான் வளர முடிந்தது. நீங்களும் அதே போல் கூடுமானவரை உங்களை மட்டம் தட்டாத ஆட்களையும், மதிக்கும் ஆட்களையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உங்கள் சேவையை அளிக்கவும்.
  8. சேவையை அளித்தபின் அவர்கள் வாழ்க்கையில் நடைபெறும் மாற்றங்களை தயவு கூர்ந்து கவனிக்கவும். எவ்வளவு பேருக்கு வாஸ்து பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்தளவிற்கு சுத்தமாக செய்கின்றோம் என்பது தான் முக்கியம்.
  9. எந்த நிலையிலும் யாரையும் உண்மைக்கு புறம்பாக பயமுறுத்தி வாஸ்து மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்க கூடாது. அதேபோல் எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் பரிகாரம் என்கின்ற பெயரில் எந்தப் பொருளையும் விற்கவே கூடாது.
  10. ஒருவர் உங்களிடம் நீங்கள் கேட்ட பணத்தை தருவதாக சொல்லி இருப்பார். நேரடியாக பார்க்கும் பட்சத்தில் அவர் ஏழ்மையின் உச்சகட்டத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருபவர்களிடம் பணம் வாங்கவே கூடாது.
  11. வாஸ்து பார்ப்பதில் பெரிய நன்மைகள் நிறைய உண்டு. அதில் முக்கியமானவை: -
  • Contacts (ஆட்கள் தொடர்பு) பெரிய அளவில் பெருகும். Contacts தான் ஒரு நாளில் Currency ஆக மாறும்.
  • Money (பணம்) நன்கு சம்பாதிக்க முடியும்.
  • Self – Belief (தன்னம்பிக்கை) வளரும்

12. இப்பயிற்சிக்கு பிறகு உங்களுக்கு என்று ஒரு Website, ஒரு அலுவலகம், ஒரு செயலாளர் என்கின்ற அமைப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

13. மற்ற வாஸ்து நிபுணர்களை உங்களுடன் ஒப்பிடு செய்து நீங்கள் தொழில் செய்ய கூடாது.

14. சாதாரண மக்களுக்கு நீங்கள் வாஸ்துவை எப்படி பரிசோதிக்க வேண்டும் என்றால் சிறிய அளவில் மாற்றத்தை சொல்லி (தவறான இடத்தில் இருக்கும் மரத்தை வெட்டுவதன் மூலமாகவும், தவறான இடத்தில் இருக்கும் சமையல் அறை, பூஜை அறையை மாற்றுவதன் மூலமாகவும், தவறான இடத்தில் உள்ள பாரத்தை குறைப்பதன் மூலமாகவும்) புரிய வைக்கலாம். பின் அவர்களுக்கு நம்பிக்கை வரும் பட்சத்தில் தவறாக உள்ள ஏனைய விஷயங்களை பற்றி கூறலாம்.

IV) நான் ஏன் வாஸ்து கற்று கொடுக்கின்றேன்:-

  1. நல்ல வாஸ்து நிபுணர்களை உருவாக்க தருணம் வந்து விட்டதாக கருதுகின்றேன்.
  2. மேலும், ஒரு உன்னத நோக்கத்திற்காக எனக்கு பணம் தேவைப்படுகின்றது. அந்த நோக்கதிற்கான பணத்தை திரட்டுவதற்காகவும்;
  3. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு நிரந்தர தொழில் வாய்ப்பை உண்டு பண்ணுவதன் மூலம் என்னை என்னுடைய மற்ற தொழில்களில் நன்கு கவனத்தை செலுத்திட வைப்பதற்காகவும்;
  4. என்னுடைய பழைய வாடிக்கையாளர்களின் தேவையை சரியாக நான் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இந்த பயிற்சியை நடத்த திட்டமிட்டு உள்ளேன்.

V) வாஸ்து பயிற்சி வகுப்பில் தேர்வு பெற்ற பிறகு எங்கள் தரப்பிலிருந்து நாங்கள் செய்ய போகும் விஷயங்கள்:

  1. பயிற்சியில் பங்கு பெறுவோர் தேர்வு பெறும் பட்சத்தில் www.vastushastram.com / www.tamilvastu.in website – களில் மாவட்ட வாரியாக Andal vastu approved Vastu Consultants என பெயர் வெளியிடப்படும். ஓவ்வொரு மாவட்டத்திற்கும் அந்த மாவட்டத்தின் அளவை வைத்து தேர்ந்தெடுக்கும் நபர்களின் எண்ணிக்கை மாறுபடும்.
  2. நான் புதியதாக ஒரு வாடிக்கையாளரை (Clients – ஐ) பார்க்க செல்லும் போது இப்போது வாஸ்து பயிற்சி பெறுபவர்கள் நான் சந்திக்கபோகும் அந்த புது வாடிக்கையாளர் இருக்கும் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் பயிற்சி பெறுபவர்கள் விருப்பப்பட்டால் அவர்களையும் என்னுடன் அழைத்து செல்வேன். (சில நேரங்களில் புதிய வாடிக்கையாளர் நான் மட்டும் தனியாக வர வேண்டும் என்று விரும்பினால் அது போன்ற சூழ்நிலையில் வாஸ்து பயிற்சி பெறுபவர்களை என்னால் அழைத்து செல்ல இயலாது)
  3. என்னுடைய பழைய வாடிக்கையாளர்கள் (Old Clients) என்னை அவர்களின் வாஸ்து தேவைக்காக தொடர்பு கொள்ள நேரிடும் போது சூழ்நிலைக்கேற்ப என்னுடைய பழைய வாடிக்கையாளர்கள் (Old Clients) விருப்பப்படும் பட்சத்தில் Vastu Practitioner Training – பெற்றவரை பயன்படுத்துவேன்.
  4. என்னுடன் 24×7 – ம் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களுக்கு என்னுடைய Personal தொலைபேசி எண் கொடுக்கப்படும்.
  5. Unique ஆன என்னுடைய Case Studies பற்றி Regular Interval – ல் வாஸ்து பயிற்சி பெற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

      உதாரணம்: - எல்லோரும் தெருக்குத்து ஒரு இடத்திற்கு இல்லவே இல்லை என்று சொல்லும் நிலையில், ஒரு இடம் தெருக்குத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று நான் மட்டும் கூறுகின்றேன் என்றால் அது எப்படி என்று விளக்கப்பட்டிருக்கும்

VI) Vastu Practitioner Training – ல் பயிற்சி பெற இருப்பவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள்: –

  1. Vastu Practitioner Training – பயிற்சி பெற்றபிறகு அனைவரும் Logo, Style, System என்று ஒரே மாதிரி பின்பிற்றுதல் நல்லது.
  2. அடுத்த கட்டம் போகும்வரை ஒரே சீராக Consultation Fees வாங்குவது நல்லது. (வகுப்பில் விரிவாக விவரிக்கின்றேன்)
  3. எந்த சூழ்நிலையிலும் Rate Negotiate பண்ண கூடாது.
  4. கடவுளுக்கும், ஏழைக்குழந்தைகளின் படிப்பிற்காகவும், அன்னதானத்திற்கும் நிறைய செலவிடுங்கள்.
  5. என்னுடைய ஆராய்ச்சியின் படி, ஜோதிடம் பார்ப்பதற்கு ஜோதிடத்தை குறைந்தபட்சம் 15 வருடமாவது ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். உங்களுக்கு குறைந்தபட்சம் 15 வருடம் ஆராய்ச்சி அனுபவம் இல்லையென்றால் தயவுசெய்து வாஸ்து பார்க்க போகும் இடத்தில் ஜோதிட ஆலோசனை யாருக்கும் வழங்க வேண்டாம்.
  6. எந்த சூழ்நிலையிலும் வாடிக்கையாளர் (Customer) சந்தோஷத்திற்காக வாஸ்து சொல்லாதீர்கள்.
  7. ஒரு காலகட்டத்திற்கு பிறகு நீங்கள் தரும் சேவையால் உங்களை கடவுளாக கூட மக்கள் நினைக்ககூடும். (நாம் எல்லோருமே கடவுள் தானே!!!). அதற்கு ஏதுவாக நாமும் நடந்து கொள்ள வேண்டும். குடியும், புகையும், அசைவமும், இன்னபிற போதை பழக்கங்களையும்  தவிர்ப்பது நல்லது.
  8. பயிற்சிக்கு பின், ஒருவரை ஒருவர் போட்டியாளர் ஆக கருதாமல், தேவைப்படும் போது ஒருவருக்கு ஒருவர் உதவிகளை செய்து கொள்ள வேண்டும். நமக்குள் நிறைய பேசிக் கொள்வோம். தேவைப்படும் பட்சத்தில் 3 மாதம் அல்லது 6 மாதம் அல்லது 1 வருடம் கழித்து மீண்டும் ஒரு முறை நாள் முழுக்க சந்தித்து பேசுவோம்.

VII) பயிற்சியில் பங்கு பெறுபவர்களின் கவனத்திற்கு: 

  • 01-10-2015 காலை 10 – மணிக்கு பயிற்சி தொடங்க உள்ளது. தங்கும் இடவசதி 01-10-2015   7.00 Am இல் இருந்து ஏற்பாடு செய்யபட்டிருப்பதால் பயிற்சி நடைபெறும் இடமான ITC Fortune Grand – Singaperumal Koil – க்கு வந்துவிட  வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
  • பயிற்சி நடைபெற உள்ள மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு பயிற்சியில் பங்கு பெற உள்ளவர்கள் நேரடியாக வந்துவிட வேண்டும் என கேட்டு கொள்கின்றேன்.
  • சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள இடங்களை பார்ப்பதற்கு செல்ல வசதியாக Tempo Traveler A/c – வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • தூரத்தை அளக்க உதவும் Digital – Laser Measurement device தேவைப்படுபவர்கள் அவர்களுடைய தேவையை சொல்லும் பட்சத்தில் நாங்கள் வாங்கி தர தயாராக இருக்கின்றோம். அதற்குண்டான சரியான கட்டணத்தை எங்களிடம் செலுத்தி அதை பெற்று கொள்ளலாம். இது கட்டாயம் கிடையாது.
  • தங்கும் வசதி: –  பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்குள் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்த ஒவ்வொரு அறையிலும் இருவர் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • பெண்கள் பெண்களுடன் தான் தங்க வைக்க படுவார்கள்.
  • கணவன் / மனைவியாக வருபவர்கள் தூங்கும் நேரத்தை தவிர மொத்த பயிற்சி கால கட்டமான 9 நாட்களில் சேர்ந்து இருக்க கூடாது.

VIII) பயிற்சியில் பங்கு பெற விரும்பும் ஒவ்வொருவரும் வரும்போது கண்டிப்பாக எடுத்து வர வேண்டிய விஷயங்கள்: -

  • ID card – Original (Driving License or Passport or Voter id etc.,) – என எந்த ID card எடுத்து வரப்போகிறீர்களோ அதை Scan செய்து உடனடியாக அனுப்பவும். நீங்கள் வகுப்பிற்கு வரும் போது Original id card – ஐ கையில் வைத்து கொள்ளவும்.
  •  4 அடி ஆழம் உள்ள Swimming pool – ல் குளிக்க ஏதுவாக

i.      Swimming  Shorts

ii.      Swimming  Glass

iii.      Swimming  Cap

  • வெயிலில் சுத்த ஏதுவாக  தொப்பி (Cap)
  • மற்றும் 4  நாட்களுக்கு தேவையான உடைகள் கொண்டு வரவும்.
  1. சொந்தமாக Camera வைத்து கொண்டாலும் நல்லது. அவ்வப்போது நான் சொல்கின்ற இடத்தில் படம் எடுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
  2. சொந்த வீடு இருப்பவர்கள் சொந்த வீட்டின் வரைபடத்தையும், சொந்த வீடு இன்னும் வாங்க முயற்சி செய்யாதவர்கள் குடியிருக்கும் வாடகை வீட்டின் வரைபடத்தையும் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
  3. ஒவ்வொரு நாளும் பயிற்சி முடிந்த பிறகு வாஸ்துவை பற்றியே பேசி கொண்டிருக்க கூடாது.
  • சாப்பிடும் போது சாப்பிடவும், தூங்கும் போது தூங்கவும் வேண்டும் – முழுமையாக. அதேபோல் தேவை ஏற்படும் நேரத்தில் மட்டும் பேசுவது நல்லது.
  • ஓர் இடத்தை பார்க்கும் போது அதை உடனக்குடன் குறித்து வைத்து கொள்ளாமல் நாம் தங்கும் அறையில் வைத்து குறித்து வைத்து கொள்வது நல்ல பழக்கம் என்பதால் நீங்களும் அப்படியே செய்ய வேண்டுகின்றேன்.

4. வாஸ்து பார்ப்பதன் மூலம் வியக்கத்தக்க வகையில் ஆள் பழக்கவழக்கங்கள் ஏற்படும் என்பது குறிபிடத்தக்க விஷயம். ஆகையால், கவனத்துடன் கற்றபின் நடந்து கொள்ளுதல் வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்தி கொள்ளவும்

  1. October 17 – ந் தேதி பணத்தை கவர்ந்திழுக்கும் செயல்முறை பயிற்சி வகுப்பிற்கு வரும் அனைவரும் பச்சை அல்லது மஞ்சள் அல்லது ஆரஞ்சு அல்லது சிகப்பு நிறத்தில் சட்டையோ, புடவையோ, சுடிதாரோ அணிந்திருப்பது அவசியம்.
  2. ஒவ்வொருவரும் 50 Gift எடுத்து வர வேண்டும். Gift என்பது ஒரு ரப்பராகவோ, Chocolate ஆகவோ, பேனவாகவோ, பென்சிலாகவோ என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  3. October 17 அன்று Vastu Practitioner Training – III – ல் பங்கு பெறுபவர்கள் அனைவரும் எடுத்து வர வேண்டிய பொருட்கள்: -
    • 1 பெரிய தாம்பூல தட்டு
    • நிறைய பணம் (ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1000)
    • நிறைய பூக்கள் (குறிப்பாக தாமரை)
    • உங்கள் மனதிற்கு பிடித்த சாமி விக்கிரகம் / படம்
    • வெளிநாட்டு பணம் இருந்தால் அந்தப்பணத்தை எடுத்து வருவது சால சிறந்தது.
    • Visiting Card

IX) பெண்கள் வாஸ்து கற்று கொள்ளலாமா? : –

வாஸ்து பயிற்சி வகுப்பை நான் நடத்துவதற்கு காரணங்கள் பல இருந்தாலும் அதில் மிக முக்கியமானது  என்று நான் நினைப்பது  பெண்கள் முன்னேற்றம் பற்றியதாகும்.

இன்று நம் சமுதாயத்தில் பெரும்பாலான படித்த பெண்களும், படிக்காத பெண்களும் சமையலறையும், படுக்கையறையும், வரவேற்பறையும் தான் அவர்களுடைய வாழ்வியில் முறை என்று சொல்லும் அளவிற்கு முடக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

குறிப்பாக இதில் வேலைக்கு போகும் பெண்களை பார்த்தால் வாரம் 5 அல்லது 6 நாள் வேலையுடன் வேலை, வாரத்தில் மீதம் உள்ள ஒரே ஒரு நாளில் குடும்பத்தினருக்கு நல்ல உறவுப் பெண்ணாக நடந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துடன் வாழ்க்கை என இப்படி ஒவ்வொரு பெண்ணும் தன் அடையாளத்தை இழந்து முகவரி இல்லாத கடிதம் அஞ்சல் பெட்டியில் போடப்பட்டிருப்பது போல் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்மணியும் தங்களுடைய பிறப்பு இலட்சியத்தை மீட்டெடுக்கவும், தங்களது லட்சிய பயண இலக்கை வெற்றிகரமாக பிரயாணப்பட்டு நல்ல படி அடைவதற்கும் ஒரு உந்து சக்தியாகவும், கலங்கரை விளக்கமாகவும், அஞ்சல் பெட்டியில் போடப்பட்டிருக்கும் முகவரி இல்லாத கடிதத்திற்கு முகவரி எழுதும் முயற்சியாகவும் என்னுடைய வாஸ்து பயிற்சி வகுப்பு கண்டிப்பாக இருக்கும்.

X) வாஸ்து பயிற்சிக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

  1. நோய்க்கு மருந்து நோயிலிருந்து எடுக்கப்படுவது உண்மையானால்… பாம்பு கடிக்கு மருந்து பாம்பிலிருந்து எடுக்கப்படுவது உண்மையானால்… பெண்ணின் பிரச்சினைக்கு பெண் தானே தீர்வாக இருக்க முடியும்…
  2. வாஸ்து என்பதே பணத்திற்கு அப்பாற்பட்டு “CONTACTS” – ஐ உருவாக்குவது தானே… அப்படி உருவாகும் CONTACTS – ஐ ஆணை விட விவரமாக, லாவகமாக கையாண்டு BUSINESS – ஆக மாற்றும் திறன் பெண்ணிற்கு உண்டு என்பதை நான் திடமாக நம்புகின்றேன்.
  3. வாஸ்துவில் இன்று 1000 ஆண்கள் இருக்கின்றார்கள் என்றால் 1 அல்லது 2 பெண்கள் தான் இருக்கின்றார்கள். இந்த எண்ணிக்கை கண்டிப்பாக குறைந்தது 500 – ஐ யாவது தொட வேண்டும்.
  4. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெண் வாஸ்து நிபுணர்கள் அதிகரித்தால் ஒரு ஆண் வாஸ்து நிபுணர் தான் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் பேச முடியாத விஷயத்தை ஒரு பெண் வாஸ்து நிபுணர் தான் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் பேச முடியும் இதன் ஒரே விளைவு சந்தோஷம் மட்டுமே அனைவருக்கும்…

XI) பெண்களுக்கு பாதுகாப்பானதா வாஸ்து பார்ப்பது?

  1. பொதுவாக நாம் இந்த உலகை அது எப்படி இருக்கின்றதோ அப்படி பார்ப்பதில்லை. நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே தான் பார்க்கின்றோம். அதனால் தான் பெரும்பாலான சமயம், நமது சொந்த நடத்தைக்கு கிடைக்கும் பதிலாகவே பிறருடைய நடத்தையும் இருக்கும்.
  2. அந்த வகையில் உலகமும், நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் பாதுகாப்பானவர்களே…
  3. உளவியல் ரீதியாக அடுத்தவர்கள் பிரச்சினையை நாம் தீர்க்க முற்படும் போதே நாம் நம் நிலையில் இருந்து உயர ஆரம்பித்து விடுகின்றோம். அந்த வகையில் எந்த மாற்றத்தையும் மனிதனுக்கு கொடுக்க முடியாத மற்ற விஷயங்களை பின்பற்றாமல் இருக்கும் ஒருவருக்கு வாஸ்துபடி ஒரு வீட்டையோ, தொழில் நிறுவனத்தையோ அமைத்து கொடுக்கும் போது அவர் 100% கண்டிப்பாக நல் வாழ்க்கை வாழ்வார் என்பது திண்ணம். அப்படி வாழ்பவர்களின் உண்மையான வாழ்த்தும் உங்களை உண்மையாக உயர்த்தும்.மொத்தத்தில் அந்த பெண்ணிற்கு மட்டும் அல்ல அவளின் மொத்த குடும்பத்திற்கே அந்த வாழ்த்து மிகவும் பாதுகாப்பானது

XII) வாஸ்து கற்ற பின் குடும்ப சூழல் காரணமாக நான் வெகு தொலைவிற்கெல்லாம் பிரயாணப்பட முடியாதே?

  • பரவாயில்லை. உங்கள் வீடு உள்ள இடத்திலேயே குறைந்தது 500 வீடுகளை வாஸ்து Centric ஆக மாற்ற முயற்சி எடுத்தாலே நீங்கள் அடுத்த கட்டத்திற்கு உட்கார்ந்த இடத்தில் இருந்தே பிரயாணப்பட ஆரம்பித்து விடுவீர்கள்.

XIII) வெறும் வாஸ்து மட்டும் தானே கற்று கொடுக்கப் போகிறீர்கள். அதை மட்டும் வைத்து கொண்டு நீங்கள் சொல்லும் இலக்கை அடைய முடியுமா?

  • வெறும் வாஸ்துவை நீங்கள் Internet – லோ, புத்தகத்திலோ கூட ஒரளவு படித்து தெரிந்து கொள்ளலாம். வாஸ்துவை மட்டும் வைத்துக் கொண்டு உங்கள் இலக்கை அடைய முடியும் என்று ஒரு கால் நான் சொன்னேன் என்றால் அதைவிட நகைச்சுவை வாக்கியம் இவ் உலகத்தில் வேறு எதுவும் இருக்க முடியாது.
  • கொஞ்சம் வாஸ்து, நல்ல மனம் கொண்டு நிறைய பணத்தை கவர்ந்து இழுக்கும் வழிமுறைகள், குறித்த இலக்கை அடைய விதிகள் என நிறைய இருக்கின்றது நம் பயிற்சி வகுப்பில்.

XIV) ஆண்டாள் வாஸ்துவில் என்ன கற்று கொடுக்கப்படும்?

1) எனக்குத் தெரிந்த, புரிந்த வாஸ்து (Vastu)

2) இலட்சியங்களை அடைய வழி முறைகள் (Goal Settings)

3) பணத்தை ஈர்க்க எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த வழி முறைகள் (Money Work shop)

இந்த வகுப்பு 3 வாரமாக இடைவெளியுடன் நடைபெறும்.

  • வியாழக்கிழமை / வெள்ளிக்கிழமை / சனிக்கிழமை / ஞாயிறுக்கிழமை என சென்னையில் 4 நாட்களும்(October 1, 2, 3, 4 – 2015)
  • சனிக்கிழமை / ஞாயிறுக்கிழமை – என கோயம்புத்தூரில் 2 நாட்களும்(October 10, 11 – 2015)
  • வெள்ளிக்கிழமை / சனிக்கிழமை / ஞாயிறுக்கிழமை – என  மதுரையில் 3 நாட்களும் நடைபெறும்(October 16, 17, 18 – 2015).
  1. வகுப்பில் கலந்து கொள்பவர்களில் நிறைய பேர் மிகுந்த சிரமத்திற்கு நடுவே பணத்தை சேகரித்து என்னிடம் கொடுத்து வாஸ்து கற்று கொள்ள என்னிடம் வருகின்றார்கள். அப்படி வருபவர்கள் அவர்கள் இலக்கை அடைய கட்டாயம் வகுப்பில் பயிற்சி பெற வரும் மற்றவர்களின் ஒத்துழைப்பும் தேவை. எனவே பயிற்சி வகுப்பை மிகவும் Serious ஆக எடுத்து கொள்ளக் கூடியவர்கள் மட்டும் வாஸ்து பயிற்சி வகுப்பு III – க்கு விண்ணப்பிக்கவும்.
  2. உங்கள் அனைவருக்கும் விலை மதிக்க முடியாத, விற்க கூடாத மிகப்பெரிய பொக்கிஷம் தர காத்திருக்கின்றேன்.
  • 18-10-2015 காலை 8 மணியிலிருந்து மது அருந்தவோ, புகை பிடிக்கவோ, மாமிசம் அருந்தவோ, போதை பொருட்கள் உபயோகப்படுத்தவே மாட்டேன் என உறுதி கொடுத்தால் அந்தப் பொக்கிஷம் அவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும்.
  • ஒரு குடும்பத்திற்கு இந்த அருட்கொடை ஒரு எண்ணிக்கையில் தான் கொடுக்கப்படும்.
  • யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை 18-10-2015 அன்று முடிவு செய்வோம்.

வாஸ்து கொண்டு தொலைந்த வாழ்க்கையை தேடி பிடிப்போம்.

தேடி பிடித்த வாழ்க்கையை தொடர்ந்தெடுத்து செல்வோம்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Write a Reply or Comment

sixteen − fifteen =