திருச்சி மண்ணச்சநல்லூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை(02-08-2015) மாலை 5 மணி அளவில் மண்ணச்சநல்லூர் வாணியர் சங்கம் நடத்தும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் மூலம் தேர்வு பெற்ற ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க இருக்கின்றோம். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்