July 29 2017 0Comment

வாஸ்து பயிற்சி வகுப்பு கடிதம் 2

ஆண்டாள் வாஸ்து பயிற்சி தொடங்குகின்றேன் என்று சொல்லி 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே நிறைய அழைப்புகள்; நிறைய கருத்து பரிமாற்றங்கள்; உங்கள் அனைவரின் அன்பான அழைப்புகளுக்கு நன்றி. ஆனந்தத்துடன் அழைத்தவர்கள் பேசியதை சொல்ல சொல்லி கேட்டேன்.

சொன்னதை, கேட்டதை வைத்து பார்த்ததில் இந்நிகழ்ச்சி பற்றி நான் சற்று உட்புகுந்து பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

I. Vastu Practitioner Training – பயிற்சி வகுப்பிற்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

II. எனக்கு Numerology, ஜோதிடம், Pronology, கைரேகை எல்லாம் தெரியும். வாஸ்துவும் தெரிஞ்சிகிட்டா நானே எல்லா விஷயத்தையும் என்னை நாடி வரும் மக்களுக்கு கொடுக்க முடியும் என்கின்ற கண்ணோட்டத்தில் இந்த வகுப்பிற்கு கற்று கொள்ள வருகிறீர்கள் என்றால் அப்படிப்பட்ட அன்பு உள்ளங்களுக்கு என் வேண்டுகோள்:

  • தயவு செய்து அப்படி பட்ட எண்ணம் வைத்து கொண்டு இந்தப் பயிற்சிக்கு வர வேண்டாம்.” என்பது தான்.
  • காரணம் நான் என்ன தான் பயிற்சி கொடுக்கிற அளவிற்கு வளர்ந்திருந்தாலும். நானே வாஸ்து என்கின்ற விஷயத்தை இன்றளவும் கற்றுக் கொள்ள முடியும் என்றுதான் நித்தமும் அணுகுகின்றேன். நீங்களும் அப்படி தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன். அப்படி இருந்தால் தான் கடல் போன்ற இந்த அறிவியலை புரிந்து கொள்ள முடியும். நாம் எல்லாவற்றையும் தெரிந்த அரைகுறையாக இருப்பதைவிட ஒன்றை மட்டும் முழுமையாக தெரிந்து கொள்ள முற்படுவோம்.
  • எப்படி டாக்டர்கள் Ortho, Neuro, Skin – க்கு என்று தனி தனியாக இருகின்றார்கலோ அதுபோல் எதாவது ஒரு கலையில் தனித்துவம் பெறுவோம்.

III. இந்நிகழ்ச்சிக்கு ஒரு பெண், தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாராளமாக வரலாம். மனைவிக்கு மட்டும் வாஸ்து பயிற்சி எனும் பட்சத்தில் கணவர் மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கு பெற அனுமதி இல்லை. அவர்கள் குடும்பமாக ஒன்றாக தங்கலாம். அப்படி தங்கும்பட்சதில் குறைந்தபட்சம் நபர் ஒருவருக்கு தோராயமாக ரூ.30,000 வரை தங்குவதற்கும், போக்குவரத்திற்கும், உணவுக்காகவும் செலவாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

  • பெண்கள் தனியாக வரும் பட்சத்தில் பெண்களுடன் தங்க வைக்கப்படுவார்கள் அல்லது கூட உறங்க பெண்கள் துணை இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு தனி அறை கொடுக்கப்படும்.

IV. பயிற்சி 5 நாள் என்பது 6 நாளாக கூட மாறுவதற்கு வாய்ப்புண்டு.

V. பயிற்சிக்கு வருகிறவர்கள் பயிற்சி நடைபெறும் 5 – 6 நாட்களும் நன்கு அலைய வேண்டி இருக்கும் என்பதை தயவு கூர்ந்து நினைவில் கொள்ள வேண்டுகின்றேன்.

VI. சொந்த 4 சக்கர வாகனங்களில் வர இருப்போர் அந்த விபரத்தை முன் கூட்டியே எங்களிடம் கூறினால் போக்குவரத்திற்கு நாங்கள் திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும்.

Vastu Practitioner Training நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:-

  • தன் மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • கடவுளும் இவர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்கின்ற அளவிற்கு நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும்.
  • சொல்வதை புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் அதுவே போதுமானது.
  • மனிதாபிமானம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
  • கடினமாக உழைக்கின்ற மனப்பான்மை 100% இருக்க வேண்டும்.
  • இலவசமாக கருத்து கேட்பவர்களை அறவே ஒதுக்கி வைக்க தெரிந்திருக்க வேண்டும்; காரணம் அவர்கள் தான் மிகவும் அபாயகரமானவர்கள். இலவசமாக வாஸ்து அறிவுரை கேட்கிறவர்கள் பெரிய அளவில் எதிர்மறை எண்ணங்களை  (Negative Energy) உங்களுக்கு கொடுக்கவல்லவர்கள். காரணம் ஒரு வீடு கட்டும் அளவிற்கு வசதி உள்ளவர்களான இவர்கள் ஒரே ஒரு சந்தேகம் என்று கேட்பார்கள். அந்த சந்தேகத்திற்கு நீங்கள் பதில் சொல்லும் பட்சத்தில் வீட்டில் வேறு தவறு இருந்து அவர்கள் கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் தேவை இல்லாமல் உங்களுக்கு தான் கெட்டப்பெயர் ஏற்படும். மேலும் ஒரு வீடு கட்டும் அளவிற்கு வசதி உள்ளவர்களுக்கு ஒரு கேள்வியோ அல்லது 1௦ கேள்வியோ நீங்கள் அவர்களுக்கு இலவசமாக பதில் சொல்லும் பட்சத்தில் நம் நேரத்தை அவர்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கின்றோம். இது தவறு. இது நம்மை முடமாக்கும் செயல். பயிற்சி பெறுபவர்கள் இந்த கருத்தை நன்கு ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.நீங்களும் யாரிடமும் இலவசம் பெற கூடாது. அதேபோல் அடுத்தவர்கள் கொடுக்கும் இலவசமும் நமக்கு தேவை இல்லை என்பதில் தெளிவாக இருங்கள்.
  • பயிற்சி முடிந்த உடன் ஒரே நாளில் போட்ட பணத்தை எடுக்க ஆசைப்படாதவர்களாக இருக்க வேண்டும்.

பயிற்சிக்கு பிறகு கீழ்கண்டவற்றையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்:-

1. எனக்கு வாஸ்து தெரியும் என்று நீங்களே உங்களை பற்றி சொல்லி கொண்டு திரிய கூடாது.

2. உங்களுக்கு வாஸ்து தெரியும் என்பதை உங்களை சுற்றி உள்ளவர்கள் ஏற்று கொள்ளும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

3. தேவையில்லாத ஆட்களிடம் வாஸ்துவை பற்றி வாதம் செய்ய கூடாது.

4. இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற பிறகு உங்களை நீங்கள் சந்தைபடுத்த தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கலையை கற்று பிரயோஜனம் கிடையாது.

5. என்னைப் பொறுத்தவரை நான் ஏறத்தாழ 1௦ வருடங்களுக்கு வாஸ்துவை சேவையாக பண்ணியதால் தான் இந்தளவிற்கு நான் வளர முடிந்தது. நீங்களும் அதே போல் கூடுமானவரை உங்களை மட்டம் தட்டாத ஆட்களையும், மதிக்கும் ஆட்களையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உங்கள் சேவையை அளிக்கவும்.

6. சேவையை அளித்தபின் அவர்கள் வாழ்க்கையில் நடைபெறும் மாற்றங்களை தயவு கூர்ந்து கவனிக்கவும். எவ்வளவு பேருக்கு வாஸ்து பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்தளவிற்கு சுத்தமாக செய்கின்றோம் என்பது தான் முக்கியம்.

7. ஒரு குறிப்பிட்ட காலம் வரை பணம் இல்லாமல் தேவையான நல்ல ஆட்களுக்கு வாஸ்து பாருங்கள். பின், பணம் இல்லாமல் யாருக்கும் பார்க்காதீர்கள். காரணம் இலவசம் மக்களால் கொண்டாடப்படுவதில்லை. இலவசத்திற்கு என்றும் மதிப்பும் இருப்பதில்லை.

8. எந்த நிலையிலும் யாரையும் உண்மைக்கு புறம்பாக பயமுறுத்தி வாஸ்து மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்க கூடாது. அதேபோல் எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் பரிகாரம் என்கின்ற பெயரில் எந்தப் பொருளையும் விற்கவே கூடாது.

9. கீழ் சொல்லப்படும் நீதிக்கதை பயிற்சிக்கு வரும் அனைவருக்கும் நினைவில் இருக்கவேண்டும்

  • ஒரு தீவில் தனது நிறுவனங்களை துவங்க இரு செருப்பு தயாரிக்கும் கம்பனிகள் முயன்றன அங்கு நிறுவனங்களை நிறுவினால் வியாபாரம் எப்படி இருக்கும் என்று கண்டு உணர தங்களுடைய விற்பனையாளர்களை அங்கு அனுப்பின…  முதல் நிறுவனத்தின் விற்பனையாளர் அங்கு ஆய்வு செய்து விட்டு அங்கு இலட்சம் பேர் உள்ளனர் ஆனால் ஒருவருக்கு கூட செருப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை. அங்கு செருப்பு நிறுவனம் தொடங்குவதால் எந்தவித லாபமும் இல்லை என்று அறிக்கை சமர்பித்தார். இரண்டாவது நிறுவனத்தின் விற்பனையாளர் அங்கு ஆய்வு செய்து விட்டு அங்கு இலட்சம் பேர் உள்ளனர் ஆனால் ஒருவருக்கு கூட செருப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை.எனவே நாம் செருப்பின் பயனை அவர்களுக்கு விளக்கி விளம்பரம் செய்தால் நாம் மிக பெரிய அளவில் வெற்றி பெறலாம் என்று அறிக்கை சமர்பித்தார். இரண்டாவது நிறுவனம் தனது நிறுவனத்தை துவங்கி வெற்றியும் பெற்றது.
  • மேற்சொன்ன கதைபோல வாஸ்துவிற்கும் உலகம் முழுவதும் தேவை இருக்கின்றது. எனவே பார்க்கின்ற ஒவ்வொரு வீட்டையும் நமக்கு ஒரு புது விஷயத்தை கற்று கொடுக்கும் ஆசானாகவும், வாடிக்கையாளர்களாகவும் பார்க்கும் மனோ பக்குவம் வேண்டும்.

10. ஆரம்ப கால கட்டங்களில் கூடுமானவரை பெரிய பணக்காரர்களுக்கு வாஸ்து பார்ப்பதை தவிர்க்கவும். காரணம் என் அனுபவத்தின் படி நீங்கள் அதிகம் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதற்கு பதில் ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் வாஸ்து பார்க்கும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து உங்களுக்கு பெரிய நட்பும் / அன்பும் / அரவணைப்பும் / ஊக்கமும் கிடைக்கும்.

11. சாதாரண மக்களுக்கு நீங்கள் வாஸ்துவை எப்படி பரிசோதிக்க வேண்டும் என்றால் சிறிய அளவில் மாற்றத்தை சொல்லி (தவறான இடத்தில் இருக்கும் மரத்தை வெட்டுவதன் மூலமாகவும், தவறான இடத்தில் இருக்கும் சமையல் அறை, பூஜை அறையை மாற்றுவதன் மூலமாகவும்,தவறான இடத்தில் உள்ள பாரத்தை குறைப்பதன் மூலமாகவும்) புரிய வைக்கலாம். பின் அவர்களுக்கு நம்பிக்கை வரும் பட்சத்தில் தவறாக உள்ள ஏனைய விஷயங்களை பற்றி கூறலாம்.

12. பணக்காரர்கள் உங்களை யாருக்கும் அறிமுகம் செய்ய மாட்டார்கள். ஆனால் ஏழைகளும், நடுத்தர மக்களும் உங்களை கண்டிப்பாக அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்வார்கள்.

13. ஒருவர் உங்களிடம் நீங்கள் கேட்ட பணத்தை தருவதாக சொல்லி இருப்பார். நேரடியாக பார்க்கும் பட்சத்தில் அவர் ஏழ்மையின் உச்சகட்டத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களிடம் பணம் வாங்கவே கூடாது.

14. உள்ளுரில் வாஸ்து அதிகம் பார்க்க முற்பட கூடாது. (உள்ளூர் மாடு விலை போகாது)

15. வாஸ்து பார்ப்பதில் பெரிய நன்மைகள் நிறைய உண்டு. அதில் முக்கியமானவை:-

  • பணம் (Money) கிடைக்கும்
  • ஆட்கள் தொடர்பு (Contacts) கிடைக்கும்
  • தன்னம்பிக்கை (Self Confidence) வளரும்

16. இப்பயிற்சிக்கு பிறகு உங்களுக்கு என்று ஒரு Website, ஒரு அலுவலகம், ஒரு செயலாளர் என்கின்ற அமைப்பை கண்டிப்பாக ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

17. மற்ற வாஸ்து நிபுணர்களை உங்களுடன் ஒப்பிடு செய்து  நீங்கள் தொழில் செய்ய கூடாது.

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Write a Reply or Comment

16 + 10 =