July 29 2017 0Comment

வாஸ்து பயிற்சி வகுப்பு கடிதம் 3

வாஸ்து பயிற்சி வகுப்பு ஆரம்ப நாள்: – 02-05-2015 (Saturday)
வாஸ்து பயிற்சி வகுப்பு துவங்கும் இடம்: – சென்னை
வாஸ்து பயிற்சிக்காக 2 – ம் நாள் தங்கும் இடம் (03-05-2015): – காஞ்சிபுரம்
வாஸ்து பயிற்சிக்காக 3 – ம் நாள் தங்கும் இடம் (04-05-2015): – தஞ்சாவூர்
வாஸ்து பயிற்சிக்காக 4 – ம் நாள் தங்கும் இடம் (05-05-2015): – மதுரை
வாஸ்து பயிற்சிக்காக 5 – ம் நாள் மற்றும் 6 – ம் நாள் தங்கும் இடம் (06-05-2015): – கோயம்புத்தூர்
வாஸ்து பயிற்சி வகுப்பு நிறைவு பெறும் நாள்: – 07-05-2015 (Thursday)
வாஸ்து பயிற்சி வகுப்பு நிறைவு பெறும் இடம்: – கோயம்புத்தூர்

  • இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி நான் யாரையும் வற்புறுத்தவில்லை. நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புகிறவர்கள் தயவு செய்து நன்றாக, சுயமாக சிந்தித்து, நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து தெளிவான முடிவெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
  • நான் யாரையும் ஆசை வார்த்தை சொல்லியோ, விளம்பரபடுத்தியோ கூட்டம் சேர்த்து இந்த நிகழ்ச்சியை நடத்தவில்லை. இந்நிகழ்ச்சியால் நமக்கும் பயன் உண்டு என்று நம்புகிறவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றால் போதுமானது.

வாஸ்து பயிற்சி வகுப்பில் தேர்வு பெற்ற பிறகு கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்:

  • நான் புதியதாக ஒரு வாடிக்கையாளரை (Clients – ஐ) பார்க்க செல்லும் போது இப்போது வாஸ்து பயிற்சி பெறுபவர்கள் நான் சந்திக்கபோகும் அந்த புது வாடிக்கையாளர் இருக்கும் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் பயிற்சி பெறுபவர்கள் விருப்பப்பட்டால் அவர்களையும் என்னுடன் அழைத்து செல்வேன். (சில நேரங்களில் புதிய வாடிக்கையாளர் நான் மட்டும் தனியாக வர வேண்டும் என்று விரும்பினால் அது போன்ற சூழ்நிலையில் வாஸ்து பயிற்சி பெறுபவர்களை என்னால் அழைத்து செல்ல இயலாது)

2. என்னுடைய பழைய வாடிக்கையாளர்கள் (Old Clients) என்னை அவர்களின் வாஸ்து தேவைக்காக தொடர்பு கொள்ள நேரிடும் போது சூழ்நிலைக்கேற்ப என்னுடைய பழைய வாடிக்கையாளர்கள் (Old Clients) விருப்பப்படும் பட்சத்தில் Vastu Practitioner Training – பெற்றவரை பயன்படுத்துவேன்.

3. என்னுடைய www.vastushastram.com website – ல் மாவட்ட வாரியாக Vastu Practitioner Training பயிற்சி பெற்றவர்கள் என்று பயிற்சியில் தேர்வு பெற்றவர்களின் பெயர் நிரந்தரமாக இருக்கும்.

4. என்னுடன் 24×7 – ம் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களுக்கு என்னுடைய Personal தொலைபேசி எண் கொடுக்கப்படும்.

5. Unique ஆன என்னுடைய Case Studies பற்றி Regular Interval – ல் வாஸ்து பயிற்சி பெற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

  • உதாரணம்:- எல்லோரும் தெருக்குத்து ஒரு இடத்திற்கு இல்லவே இல்லை என்று சொல்லும் நிலையில், ஒரு இடம் தெருக்குத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று நான் மட்டும் கூறுகின்றேன் என்றால் அது எப்படி என்று விளக்கப்பட்டிருக்கும்

6. ஒவ்வொரு வாஸ்து நிபுணரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஊர் ஆன இலங்கைக்கு விருப்பப்படுபவர்களை அவரவர் சொந்த செலவில் நான் அழைத்து செல்வேன். காரணம் தவறான வாஸ்துவினால் ஒரு நாடு சிதைந்து நாம் சகோதர இனம் அழிந்து போனதையும், நைனா தீவு நாகபூஷணியம்மனையும், நம் பழைய வாடிக்கையாளர்களையும் கண்டிப்பாக பார்க்க வைத்து மனதில் பதிய வைக்க ஆசைப்படுகின்றேன்.

7. என்னை நிறைய பேர் Franchise Model – ல் Vastu Practitioner Training – க்கு பிறகு வேலை செய்ய சொன்னார்கள். நான் உழைக்காததற்கு பணம் பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் Vastu Practitioner Training – ல் பயிற்சி பெற இருப்பவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள்:-

  • Vastu Practitioner Training – பயிற்சி பெற்ற அனைவரும் Logo, Style, System என்று ஒரே மாதிரி பின்பிற்றுதல் நல்லது.
  • அடுத்த கட்டம் போகும்வரை ஒரே சீராக Consultation Fees வாங்குவது நல்லது. (வகுப்பில் விரிவாக விவரிக்கின்றேன்)
  • எந்த சூழ்நிலையிலும் Rate Negotiate பண்ண கூடாது.

8. கடவுளுக்கும், ஏழைக்குழந்தைகளின் படிப்பிற்காகவும், அன்னதானத்திற்கும் நிறைய செலவிடுங்கள்.

9. என்னுடைய ஆராய்ச்சியின் படி, ஜோதிடம் பார்ப்பதற்கு ஜோதிடத்தை குறைந்தபட்சம் 15 வருடமாவது ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். உங்களுக்கு குறைந்தபட்சம் 15 வருடம் ஆராய்ச்சி அனுபவம் இல்லையென்றால் தயவுசெய்து வாஸ்து பார்க்க போகும் இடத்தில் ஜோதிட ஆலோசனை யாருக்கும் வழங்க வேண்டாம்.

10. எந்த சூழ்நிலையிலும் வாடிக்கையாளர் (Customer) சந்தோஷத்திற்காக வாஸ்து சொல்லாதீர்கள்.

11. ஒரு காலகட்டத்திற்கு பிறகு நீங்கள் தரும் சேவையால் உங்களை கடவுளாக கூட மக்கள் நினைக்ககூடும். (நாம் எல்லோருமே கடவுள் தானே!!!). அதற்கு ஏதுவாக நாமும் நடந்து கொள்ள வேண்டும். குடியும், புகையும், அசைவமும், இன்னபிற போதை பழக்கங்களையும் தவிர்ப்பது நல்லது.

12. பயிற்சிக்கு பின், ஒருவரை ஒருவர் போட்டியாளர் ஆக கருதாமல், தேவைப்படும் போது ஒருவருக்கு ஒருவர் உதவிகளை செய்து கொள்ள வேண்டும். நமக்குள் நிறைய பேசிக் கொள்வோம். தேவைப்படும் பட்சத்தில் 3 மாதம் அல்லது 6 மாதம் அல்லது 1 வருடம் கழித்து மீண்டும் ஒரு முறை நாள் முழுக்க சந்தித்து பேசுவோம்.

  • Vastu Practitioner Training – பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர்கள் அவர்களுடைய குடும்பத்தினரின் பெயர் / பிறந்த தேதி / நட்சத்திரம் / ஹோரை / திதி / நேரம் / பிறந்த ஊர் பெயர் / வாக்கிய பஞ்சாங்கப்படி எழுதப்பட்ட ஜாதகம் / வீட்டின் வரைபடம் மற்றும் எதிர்கால லட்சியம் என்ன என்பதை தெரிவிக்கவும்.
  • மொத்த பயிற்சி கட்டணத்தில் 25% முன்பணமாக – April 7, 2015 – க்குள் கொடுக்க வேண்டும்.
  • மொத்த பயிற்சி கட்டணத்தில் மீதமுள்ள 75% பணம் – Aril 25, 2015 – க்குள் கொடுக்க வேண்டும்.
  • எங்களிடம் Vastu Practitioner Training பயிற்சிக்காக முன்பணம் செலுத்திய பிறகு நாங்கள் அந்த பணத்தை ஹோட்டல் மற்றும் இதர செலவுகளுக்கான முன்பணமாக மற்றவர்களுக்கு செலுத்த இருக்கின்றோம். இந்த காரணத்திற்காக எங்களிடம் முன்பணம் செலுத்திய பிறகு ஒருவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் நாங்கள் இந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய முன்பணத்தை திருப்பி தர இயலாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம்.
  • முழுப்பணமும் செலுத்திய பிறகு நிகழ்ச்சியில் ஒருவர் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் மொத்த தொகையில் 50% பிடித்து கொண்டு 50% பணம் மட்டுமே தரப்படும்.
  • சொந்த வாகனத்தில் வருகிறீர்களா என்பதையும் தெரியப்படுத்தவும்.

அடுத்த கடிதத்தில் தங்கும் இடம், 6 நாட்கள் என்ன செய்ய போகின்றோம் என்பதை விவரிக்கின்றேன்.

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Write a Reply or Comment

eight + twenty =