July 29 2017 0Comment

வாஸ்து பயிற்சி வகுப்பு

வெகு விரைவில் எனக்கு தெரிந்த வாஸ்துவை மேலும் விஸ்தரிக்கும் வகையில், நான் தேர்ந்தெடுக்கும் சிலருக்கு வாஸ்துவை நன்கு சொல்லி கொடுக்க ஆசைப்படுகின்றேன். சொல்லி கொடுப்பது என்றால் கரும்பலகையில் கதை எழுதி அதை பார்த்து நீங்களும் எழுதிக் கொள்ளவும் என்கின்ற ரீதியில் அல்ல… கிட்டத்தட்ட கருமையத்தில் கருத்தை பதியமிடும் வேலையாக நான் செய்ய போகும் வேலை இருக்கும் என திடமாக உறுதியளிக்கின்றேன்…

கருத்து பரிமாற்றத்திற்காக என ஒரு நாள்;

நான் கொடுத்த வரைபடங்கள் போல் கட்டிய வீடுகளையும்;

நான் கொடுத்த வரைபடங்கள் போல் கட்டாத வீடுகளையும்;

கூடவே வாஸ்து படி வீடு அமைத்தும் கஷ்டப்படுகின்றேன்(?!!!) என்று சொல்பவர்களின் வீடுகளையும்;

பிரயாணப்படும் போது ஒரு சில கோவில்களின் அமைப்பையும்;

குழந்தை பேறு தள்ளிப் போனவர்கள் திருவெண்காடு சென்று வந்தபின் எப்படி குழந்தை பேறு கிடைக்க பெறுகின்றார்கள் என்பதையும்;

மேல்மருவத்தூர் சென்று வந்தால் குடிகாரர்கள் குடியை எப்படி நிறுத்துகிறார்கள் என்பதையும்;

கள்ளழகரும் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளும் / திருவொற்றியூர் வடிவுடையம்மனும் / புன்னைநல்லூர் மாரியம்மனும் என்னவற்றிற்காக சிறப்பு பெறுகிறார்கள் என்பதையும்;

கூடவே சில தேவாலயங்களின் அமைப்பையும்;

சில தர்க்காகளின் அமைப்பையும்;

பார்த்தபின்,

பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு உண்மையான பரீட்சையையும் (Practical - 100 Marks & Theory - 100 Marks) வைத்து கடைசியில் வாஸ்துவிற்காக புதிய வாடிக்கையாளர்களை சந்திக்க போகும் போது என்னுடன் சேர்த்து பயிற்சி பெறுபவர்களையும் அந்த புதிய இடத்தை பார்க்க வைக்க உள்ளேன்.

நடுவில் சிறப்பு அழைப்பார்களாக சிலர் பேசுவதையும் கேட்க வைக்க போகின்றேன். (குறிப்பாக நான் மிகவும் மதிக்கும் மற்றும் என்னை தன்னுடைய ஜோதிட அறிவால் மிரட்டிய திரு.சந்திரசேகர் – கடலூர் அவர்களுடன் பயிற்சியில் பங்கு பெறும் அனைவரும் பயன் பெறும் வகையில் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்து இருக்கின்றேன்.)

பயிற்சியில் பங்கு பெறும் அனைத்து நாட்களும் அனைவரும் ஒரே இடத்தில் உண்டு, தங்கும் வகையில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஒரு அறையில் இருவர் தங்கும் வகையில் அறை வசதி செய்யப்படும்.

பயிற்சி நாட்கள்:- 5 நாட்கள்

பயிற்சி ஆரம்பிக்கும் இடம் சென்னை;

பயிற்சி நிறைவு பெறும் இடம் கோயம்புத்தூர்.

பயிற்சி நடைபெறும் போது தங்கும் இடங்கள் கீழ்கண்டவாறு:-

  • சென்னை - Le Royal Meridian (5* Deluxe)
  • மதுரை - Hotel Sangam (3* Deluxe)
  • திருச்சி - Hotel Sangam (3* Deluxe)
  • கோயம்புத்தூர் - Le Royal Meridian (5* Deluxe)

நான் ஏன் கற்று கொடுக்கின்றேன்:-

*  நல்ல வாஸ்து நிபுணர்களை உருவாக்க தருணம் வந்து விட்டதாக கருதுகின்றேன்.

*  மேலும், ஒரு உன்னத நோக்கத்திற்காக எனக்கு பணம் தேவைப்படுகின்றது. அந்த நோக்கதிற்கான பணத்தை திரட்டுவதற்காகவும்;

*  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு நிரந்தர தொழில் வாய்ப்பை உண்டு பண்ணுவதன் மூலம் என்னை என்னுடைய மற்ற தொழில்களில் நன்கு கவனத்தை செலுத்திட வைப்பதற்காகவும்;

* என்னுடைய பழைய வாடிக்கையாளர்களின் தேவையை சரியாக நான் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இந்த பயிற்சியை நடத்த திட்டமிட்டு உள்ளேன்.

இந்த பயிற்சி யாருக்கு தேவை:-

  • வாஸ்து அறிவு பெற்று வாஸ்துவை தொழிலாக செய்ய நினைப்பவர்களுக்கும், சேவையாக செய்ய நினைப்பவர்களும், பகுதி நேர தொழிலாக செய்ய இருப்பவர்களுக்கும் இந்த பயிற்சி பெரிய அளவில் பயன்பெறும்.
  • எனக்கு துணைவர் இல்லை, வேலை இல்லை, உறவுகளின் ஆதரவு இல்லை, பண கஷ்டத்தில் இருக்கின்றேன் என்று வாழ்பவர்களுக்கும்,  தைரிய மனம் படைத்தவர்களுக்கும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பயிற்சி இருக்கும்.

பிரயாணப்பட இருக்கும் ஊர்கள்:- (மாறுதலுக்குட்பட்டது)

  • சென்னை
  • காஞ்சிபுரம்
  • திருச்சி
  • தஞ்சாவூர்
  • சிதம்பரம்
  • மதுரை
  • ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • திருப்பூர்
  • கோயம்புத்தூர்

கட்டணம்:-
எத்தனை நபர்கள் கலந்து கொள்கிறார்கள், எந்த வாகனத்தில் எந்த இடத்திற்கெல்லாம் பிரயாணப்பட போகின்றோம் என்பதை வைத்து சரியான கட்டணம் முடிவு செய்யப்படும்.
தயவு செய்து இலவச அனுமதி கேட்டு எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.
குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.

வகுப்பு ஆரம்பிக்கும் தேதி:-

  • 2015 மே மாதம் 3 – வது அல்லது 4 – வது வாரத்தில் இருக்கும்.

பயிற்சியில் பங்கு பெறுவோர் தேர்வு பெறும் பட்சத்தில் www.vastushastram.com / www.tamilvastu.in website – களில் மாவட்ட வாரியாக Sri Andal Consulting approved Vastu Consultants என பெயர் வெளியிடப்படும். ஓவ்வொரு மாவட்டத்திற்கும் அந்த மாவட்டத்தின் அளவை வைத்து தேர்ந்தெடுக்கும் நபர்களின் எண்ணிக்கை மாறுபடும்.

நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
திரு.செந்தூர் சுப்பிரமணியன் — +91 99622 94600
திரு.அபுதாலிப் —  +91 98843 94600

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Write a Reply or Comment

twelve + fifteen =