Andal Vastu Practitioner Training III – Feedback by Mr.Pon Rajasekar, Erode

ஸ்ரீ

இரவினிலே ஆட்டம் பகலினிலே தூக்கம் என்கின்ற பாட்டு இவரை முதன் முதலாக பார்த்த போது எங்களின் இந்த தங்கத் தம்பிக்காக எழுதப்பட்டதோ என எண்ணம் தோன்றியது  என் மனதில்.

கால ஓட்டத்தில்

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்!

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்!!

என்பதற்கேற்ப வள்ளலாரின் தற்போதைய பெயர் பொன் ராஜசேகர்.

கொண்டாட்டம் மட்டும் தெரிந்து வாழ்ந்த இவர்

இன்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான வாழ்க்கை – புது சொந்தங்களோடு…………

மிரட்சியாகவும், அதே சமயம் சந்தோஷமாகவும் இருக்கின்றது – கடவுளின் ஆட்டத்தை கண்டு

கண்டிப்பாக எங்கள் பொன் ராஜசேகர் கலங்கரை விளக்கமாக வாஸ்து உலகில் திகழ்வார் என நம்புகின்றேன். அதற்கு காரணம் இவருடைய மகா அறிவு.

பொன் மீது பற்றில்லா எங்கள் மாசற்ற பொன்னே உன் அதிரடி ஆட்டத்தை எதிர்பார்த்து இருக்கையின் விளிம்பின் ஓரமாக இருந்து கொண்டிருக்கின்றேன்.

சீக்கிரம் ஆட்டத்தை துவங்கு.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

1 × 1 =