ஸ்ரீ
முருக என்கின்ற வார்த்தைக்கு
மு – முகுந்தன்
ரு – ருத்ரன்
க – கமலாசனன் என அர்த்தம் உண்டு.
முருகன் என்றால் இளகிய மனம் படைத்த தெய்வம் என சொல்வதும் உண்டு.
முருகன் என்றால் அழகு என சொல்வதும் உண்டு.
ஆக அழகு, இளகிய மனம், அறிவு, தெளிவு, கூர்மை இதெல்லாம் தங்கள் குழந்தைக்கான வார்த்தைகள் என தெரிந்து தான் இவர் பெற்றோர் இவருக்கு இளமுருகன் என பெயரிட்டார்களோ!!!!
கண்டுபிடிக்கவே முடியாத காற்றை கூட கண்டு பிடித்து விடலாம் ஆனால் மிகவும் எளிமையான மனிதரான எங்கள் இளமுருகனை வகுப்பில் கண்டுபிடிக்கவே முடியாது என்கின்ற அளவிற்கு. போவதும் தெரியாது; வருவதும் தெரியாது; இருப்பதும் தெரியாது; என்கின்ற அளவிற்கு மென்மையானவர் மொத்தத்தில் இவர் தான் எங்கள் குடும்பத்தின் அழகு முகம், அறிவு முகம், பொறுமை முகம், எளிமை முகம், அன்பு முகம், பண்பு முகம், மொத்தத்தில் எங்கள் எல்லோருக்கும் பிடித்த எங்கள் குழுவின் ஆறுமுகம்.
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்