கோவர்த்தனாம்பிகை திருக்கோயில்:
இத்தலத்தில் அம்பாள் மேற்கு நோக்கி தவம் புரிந்ததால் சிவனும் மேற்கு நோக்கிய படியே அருட்காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் தனிச்சன்னதியில் உச்சிப்பகுதியில் #சிங்கமுக உருவம் கொண்ட திருவாசியின் மீது நின்ற கோலத்தில் தலையில் கடிண்ட மகுடத்துடன், மேற்கு நோக்கியபடி கைகளில் தாமரை, குவளைகள் கொண்டு அம்மன் காட்சி தருகிறாள்.
அம்பாள் தவம் இருந்து மக்களைக் காத்து அருளிய இப்பகுதி பழனங்கள் (வயல்வெளி) நிறைந்த பழமையான பகுதியாக இருந்ததால் இவ்வூர் தொடக்கத்தில் #பெரும்பழனம் என்றும் பெரும்பழனாபுரி என்றும் வழங்கப் பட்டது.
காலப்போக்கில் பெருமாநல்லு}ர் என்ற பெயர் ஏற்பட்டது. சோழமண்டலத்தைச் சேர்ந்த #பொன்னம்பலக்கூத்தன் என்பவர் இத்தலத்தையும், இங்குள்ள விநாயகர் கோயிலையும் புதுப்பிக்க தானம் செய்துள்ளார்.
சிவனின் சிறந்த பக்தரான சுந்தரரும், அவரது நண்பர் சேரமானும் இணைந்து வந்து இவ்விடத்தில் சுவாமியை பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர்.
ராஜராஜ உத்தம சோழன், #உத்தமசோழவீரநாராயணன் ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டதால் இங்குள்ள இறைவன் #உத்தமலிங்கேஸ்வரர் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
அழகிய சிற்பங்களைத் தாங்கிய தூண்களில் சிவராத்திரி கொண்டாடும் காரணத்தை விளக்கும் காட்சி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், வீரபாகு, மனைவியுடன் நம்பிராஜர் சிற்பங்கள் கலைநயத்துடன் அமைக்கப் பட்டுள்ளன.
#சிறப்பம்சங்கள் :
இத்தலத்தில் அம்பாள் மேற்கு நோக்கி தவம் புரிந்ததால் சிவனும் மேற்கு நோக்கிய படியே அருட்காட்சி தருகிறார்.
திருப்பூரில் இருந்து கோபிசெட்டிபாளையம் வழியாக ஈரோடு செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது.
திருப்பூரில் இருந்து குன்னத்தூர், நம்பியூர், கணக்கம்பாளையம் செல்லும் 10, 26, 54, 26, 43 வழித்தட பஸ்கள் இவ்வழியே செல்கின்றன.
Share this: