வாழைத்தண்டு
சத்துக்கள்: நார்ச் சத்து, நீர்ச் சத்து அதிகம் இருக்கின்றன. ஓரளவு வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸும், குறைந்த அளவு கலோரியும் உள்ளன.
பலன்கள்: அதிக எடை உள்ளவர்கள், தினமும் எடுத்துக்கொள்ளலாம். நீர்ச் சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரை நன்றாக வெளியேற்றும். சாப்பிட்டவுடன், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
நெல்லிக்காய்
சத்துக்கள்: வைட்டமின் சி, செல்லுலோஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட் இதில் உள்ளன.
பலன்கள்: ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. வாய் கசப்பைப் போக்கும். இதயம், நுரையீரலை வலுவூட்டும். இளமையைத் தக்கவைக்கும். முடிவளர்ச்சிக்கும், தோல் பளபளப்புக்கும், கண் பார்வை கூர்மைக்கும் நெல்லிக்காய் அருமருந்து. தினமும் ஒரு நெல்லிக்காயை, தேனில் ஊறவைத்துச் சாப்பிடுவதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
மாம்பழம்
சத்துக்கள்: தாது உப்புக்கள், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின், சர்க்கரை அதிக அளவு இருக்கின்றன. மாவுச் சத்து, வைட்டமின் சி ஓரளவும், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன.
பலன்கள்: மலச்சிக்கலைப் போக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது. ரத்தம் அதிகரித்து, உடலுக்கு நல்ல பலத்தைக்கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள், உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் நாள் ஒன்றுக்கு 2 துண்டுகள் மட்டுமே சாப்பிடலாம்.